
சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: பேரணி குறித்து மனம் திறந்த அபிஜீத் தீப்கே!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் மீது கொண்டிருந்த கோபம் குறித்து அபிஜீத் தீப்கே பேசியுள்ளது தொடர்பாக...

அபிஜீத் தீப்கே
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான செளரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மீது கொண்டிருந்த கோபம் குறித்து அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மனம் திறந்து பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றபோது தான் உண்ணாவிரத போராட்டத்தால் சோர்வடைந்து இருந்ததாகவும், ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் அமித் ஷாவை சந்திக்கச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இந்த பேரணியில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள் குவிந்திருந்தனர். இப்பேரணியின் முடிவில் மாணவர்கள் போராட்டம் வெற்றி பெற்றது. மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார்.
எனினும் இப்பேரணி நடந்த நாளில் செய்தித் தொடர்பாளர்களான செளரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மீது கோபம் கொண்டிருந்தது குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மனம் திறந்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
''ஜூலை 20 ஆம் தேதி சன்சத் சலோ (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) நடைபெற்றது. ஆனால் பேரணி நடந்த நாளில் செய்தித் தொடர்பாளர்கள் செளரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய இருவரும் களத்தில் இல்லை. அவர்கள் அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாஜக, எங்கள் பிரதிநிதிகள் இருவரை, 5 மணி நேரம் காக்க வைத்து, பின்னர் 10 நிமிடங்களுக்கு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில் என்னால் செயல்படவே முடியவில்லை. ஏனெனில் அது என் உண்ணாவிரதப் போராட்டத்தின் 3வது நாள். ஜந்தர் மந்தரில் கூடியிருந்த மாணவர்கள், இளைஞர்களுடன் என்னால் உரையாற்ற முடியவில்லை. அவர்கள் பேரணி செல்ல தயாராக இருந்தனர். பொறுமையை கடைபிடிக்க அவர்கள் தயாராக இல்லை.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அவர்களுடன் உரையாற்ற யாரும் இல்லை. அப்போது தொடர்ந்து நான் செளரவ் தாஸுக்கும் அசுதோஷ் ரங்காவுக்கும் தொலைபேசியில் அழைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் அவர்களை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் கோபத்தின் உச்சத்தில் நான் இருந்தேன்.
உண்ணாவிரதத்தில் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. ஒருகட்டத்திற்கு மேல் நானே கூட்டத்திற்கு மத்தியில் உரையாற்றினேன். கூட்டத்தைக் கட்டுப்படுத்தினேன். நான் மிகுந்த சோர்வாக உணர்ந்தேன். அதனால்தான் அன்றைய நாளில் நான் வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்டேன். என் என்றால் என்னால் நடக்க முடியவில்லை.
இருந்தபோதும் நாங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் பேரணி சென்றோம். இங்கு இருந்த யாருக்கும் எந்தவித தொந்தரவையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை'' என அபிஜீத் தீப்கே குறிப்பிட்டார்.
Summary
Cocoroach janata party abhijeet Dipke recalls moment when he was mad at Saurav Das, Ashutosh Ranka
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







