கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!

நாட்டில் ஐபோன் தயாரிப்பை 25 சதவிகிதத்தில் இருந்து 35% ஆக உயர்த்த ஆப்பிள் முடிவு செய்துள்ளது குறித்து...

Apple iPhone production

ஆப்பிள் - எக்ஸ்

Updated On :

அடுத்த 5 ஆண்டுகளில் 30 முதல் 35% ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. உலகளாவிய ஐபோன் உற்பத்தியில் 25% இந்தியாவில் நடக்கும் நிலையில், தற்போது அதனை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் 2031 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடக்கும் ஐபோன் உற்பத்தியின் மதிப்பு 25 பில்லியன் டாலரில் இருந்து 40 - 45 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோனுக்குத் தேவையான உதிரி பாகங்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 300 ஏக்கர் பரப்பளவில் ஐபோன் உதிரிபாக தயாரிப்பை மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமின்றி அகமதாபாத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது.

அதிகரிக்கும் ஐபோன் தயாரிப்பு

நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஐபோன் உதிரி பாக உற்பத்தி அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு 55 மில்லியன் ஐபோன்கள் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 36 மில்லியனாக இருந்த நிலையில், 53 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியச் செயல்பாடுகள் தற்போது ஐந்து முக்கிய ஒருங்கிணைப்பு ஆலைகளை உள்ளடக்கியுள்ளன. அவற்றில் மூன்று டாடா குழுமத்தாலும், இரண்டு ஃபாக்ஸ்கான் நிறுவனத்தாலும் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு, வளர்ந்து வரும் சுமார் 45 உதிரிபாக விநியோகஸ்தர்களின் தளம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மிகப்பெரிய பயனாளியாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது. இந்த ஐந்தாண்டு திட்டம் 2026 உடன் முடிவுக்கு வருகிறது. இதனை 2041 மார்ச் 31 வரை நீட்டிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 62,500 கோடி மதிப்பிலான புதிய ஐந்தாண்டுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன்கீழ், ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்வோருக்கான வரி விலக்குகள் 2041-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

Summary

Apple may shift 30-35% of global iPhone production to India in next 5 years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.