ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 விலை உயரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஐபோன் 18 அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், விலை குறைப்புக்கு பதிலாக முந்தைய மாடல் விலை அதிகரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த சமூக வலைதளமான வெய்போ, இன்று முதல், அதாவது ஆக. 10 ஆம் தேதி முதல் ஐபோன் 17 விலை உயரவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் விலை ஏற்றம் செய்யப்பட்டது. மேக், ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ், ஸ்டூடியோ டிஸ்பிளே போன்ற தயாரிப்புகளின் விலையில் மாற்றங்கள் இருந்தன. ஆனால், ஐபோன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதிகப்படியான நினைவகம் மற்றும் சேமிப்பு செலவுகளுக்காக ஜூன் மாதம் முதல் இந்த விலை மாற்றம் அதிகமாக இருந்தது.
ஐபோன் 17 விலையேற்றம் ஏன்?
ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதத்தில் ஐபோன் 18, ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக் கூடிய முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
இதனைத் தொடர்ந்து ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18இ ஆகிய ஸ்மார்ட்போன்களும் 2027 கோடையையொட்டி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் அதிக எண்ணிக்கையில் இருப்பு உள்ளதால் அடுத்த ஆண்டு முழுவதுமே ஐபோன் 17 விற்பனை தொடரும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக ஐபோன் 18 வெளியீட்டையொட்டி சிறிது காலத்துக்கு விலை மாறுபாடு செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களின் விலை
ஐபோன் 17 இ - ரூ. 64,900
ஐபோன் 17 - ரூ. 82,900
ஐபோன் ஏர் - ரூ. 1,19,900
ஐபோன் 17 ப்ரோ - ரூ. 1,34,900
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் - ரூ. 1,49,900
Summary
iPhone 17 price may increase next week Is the iPhone 18 launch the reason?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!

முன்பதிவில் சாதனை படைத்த சாம்சங் கேலக்ஸி இசட்!

ஆகஸ்ட்டில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்!

இனி குரல் மூலம் போட்டோ எடுக்கலாம்! ஐபோன் கேமராவில் புதிய ஏஐ வசதி!
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!




