அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

இனி குரல் மூலம் போட்டோ எடுக்கலாம்! ஐபோன் கேமராவில் புதிய ஏஐ வசதி!

குரல் வழியில் கேமராவை கட்டுப்படுத்தி புகைப்படம், விடியோ எடுத்து எடிட்டிங் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்.

News image

ஆப்பிள் ஐபோன் கேமரா - எக்ஸ்

Updated On :30 ஜூன் 2026, 1:04 pm IST

ஐபோன் கேமராவில் செய்யறிவு (ஏஐ) அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் குரல் வழியில் கேமராவை கட்டுப்படுத்தி புகைப்படம், விடியோ எடுக்கலாம். எடிட்டிங் செய்யலாம்.

மேலும், புகைப்படம் எடுக்கும் இடங்கள், அது குறித்த தகவல்கள் குறித்து ஏஐ உதவியுடன் உடனடியாகத் தகவல்களை பயனர்களால் பெற முடியும் என ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

அதாவது, ஐ.ஓ.எஸ். 27 அப்டேட்டில் கேமரா செயலியில் குரல் வழி கட்டுப்பாடான 'சிரி' வசதி அறிமுகமாகும் என ஆப்பிள் தரப்பில் கூறப்படுகிறது.

பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை முழுக்க முழுக்க ஏஐ மூலம் எளிமையாக்கும் அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் கேமராவில் செய்யறிவு (ஏஐ) உதவியுடன் குரல் வழியில் கட்டுப்படுத்தும் அம்சத்தை ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளது.

இதனால், ஐபோன் சிரி வசதியில் பயனர்கள் கட்டளையிடுவதைப்போல கேமராவையும் குரல் மூலம் கட்டுப்படுத்தி புகைப்படங்கள், விடியோக்கள் எடுக்கலாம். மேலும் எடுத்த புகைப்படத்தில் உள்ள இடம், உணவு, பொருள்கள் குறித்த தகவல்களை தொகுப்பாக உடனடியாகப் பெறலாம்.

உதாரணமாக ஒரு உணவை புகைப்படம் எடுத்தால் அந்த உணவு குறித்து முழுத் தகவல்களையும் பெற முடியும். தகவல்களை முழுமையாகத் தேடுவதற்காக சாட் ஜிபிடி போன்ற செய்யறிவு தளத்தையும் ஆப்பிள் பயன்படுத்தவுள்ளது.

இதனை மென்பொருள் மேம்பாடாக (அப்டேட்) மட்டுமின்றி எதிர்கால செல்போன் செயலிகளின் பயன்பாடாகவும் பார்க்கப்படுகிறது.

Summary

Apple’s iPhone Camera App Is Getting an AI Upgrade in iOS 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.