டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

வாட்ஸ்ஆப்பில் 'கெஸ்ட் மோட்'!... செயலி இல்லாதவர்களுடனும் இனி உரையாடலாம்!

வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தாதவர்களுடனும் உரையாடும் வகையில் 'கெஸ்ட் மோட்' அறிமுகமாகவுள்ளது குறித்து...

News image

வாட்ஸ்ஆப் கெஸ்ட் மோட் - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 6:24 pm IST

வாட்ஸ்ஆப் செயலியில் புதிதாக கெஸ்ட் மோட் என்ற அம்சம் அறிமுகமாகவுள்ளது. இது தொடர்பான சோதனை முயற்சியில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ்ஆப் உலகம் முழுவதும் பயனர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 85 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்.

பயனர்களின் சேவையை அதிகரிக்கும் வகையில், அடிக்கடி புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவரும் வாட்ஸ்ஆப் நிறுவனம், தற்போது கெஸ்ட் மோட் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது, இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தாதவர்களுக்கு மூலம் குறுஞ்செய்தி அனுப்பி உரையாட முடியும். கெஸ்ட் மோட் அம்சத்தில் உள்ள கெஸ்ட் சாட் வசதியைப் பயன்படுத்தி சிறப்பு லிங்க் ஒன்றை உருவாக்க முடியும்.

அதனை எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் அல்லது வேறு செயலிகள் மூலம் வாட்ஸ்ஆப் பயன்படுத்தாதவருக்கு அனுப்பி, அந்த லிங்கை மறுமுனையில் இருப்பவர்கள் திறப்பதன் மூலம் உரையாடலைத் தொடங்க முடியும். ப்ரெளசர் மூலம் அந்த லிங்கில் இருந்து உடையாடலாம்.

ஆனால் இவ்வகை உரையாடலில் ஸ்டிக்கர், புகைப்படம், விடியோ மற்றும் கோப்புகள் என எதையும் அனுப்ப முடியாது. வாட்ஸ்ஆப்பில் செய்வதைப்போல குரல் அழைப்பு, விடியோ அழைப்பு, குரல் பதிவுகளை மேற்கொள்ள முடியாது.

தற்போதைக்கு வெறும் குறுஞ்செய்தி அனுப்பும் உரையாடலை மட்டுமே இதில் மேற்கொள்ள முடியும் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

Summary

WhatsApp is rolling out guest chats on Android and iOS we message people who don’t have the app

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.