வாட்ஸ்ஆப் செயலியில் விடியோ கால் செய்வதைப்போல, இனி வாட்ஸ்ஆப் வெப்பிலும் விடியோ கால் செய்ய முடியும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப்பில் அழைப்பு அம்சத்தை மேம்படுத்தும் பிற கருவிகளுடன், வாட்ஸ்ஆப் வெப்பிலும் இனி விடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
கணினியில் விடியோ அழைப்புக்கு கூகுள் மீட் போன்ற வேறு சில செயலிகளையே பயன்படுத்தி வந்த நிலையில், இனி வாட்ஸ்ஆப் வெப்பில் இருந்தவாறே விடியோ அழைப்புகளைச் செய்ய முடியும்.
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப்பில் அழைப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பிற கருவிகளிலும் பயனர்கள் எளிதாக அழைப்புகளை ஏற்றுப் பேசும் வகையில் இந்த மேம்பாடு (அப்டேட்) அமைந்துள்ளது.
தேடுபொறியில் (browser) இருந்தவாறே வாட்ஸ்ஆப் வெப்பில் விடியோ அழைப்பு அல்லது சாதாரண ஆடியோ அழைப்புகளை பயனர்களால் மேற்கொள்ள முடியும். தனி நபருடனோ அல்லது குழுவாகவோ அழைப்புகளை செய்ய முடியும்.
ஸ்மார்ட்போன்களில் இருந்தவாறு இந்த அழைப்புகளுக்கு தனியாக எந்தவொரு கட்டணமும் இல்லை. நேர நிர்ணயமும் இல்லை என மெட்டா அறிவித்துள்ளது.
இதேபோன்று அழைப்புகளுக்கான லிங்குகளை உருவாக்கி அதில், பலரை இணையும் வகையிலும் செய்ய முடியும். இதனால், குழு விடியோ அழைப்புகளை எளிதில் ஒருங்கிணைக்க முடியும்.
மேலும் குயிக் எச்.டி. அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதால், விடியோ அழைப்பு தொடங்கிய சில விநாடிகளில் எச்.டி. தரத்தில் விடியோ மாறும். இதுமட்டுமின்றி ஒலி இரைச்சலைக் கட்டுப்படுத்தும் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், புற ஒலிகளில் இறைச்சல் மறுபுறம் உள்ள பயனர்களை பெருமளவு பாதிக்காது. துல்லியமான விடியோ, ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
Summary
You can now make video calls on WhatsApp Web! New feature introduced!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை பார்ப்பது எத்தனை பேர்? அறிவது எப்படி? பயன்கள் என்னென்ன?

வாட்ஸ்ஆப் சேனல் அப்டேட்டுகளை பார்ப்பது எத்தனை பேர்? அட்மினுக்கு புதிய அம்சம் அறிமுகம்!

உலகக் கோப்பையைக் கொண்டாடும் வாட்ஸ்ஆப்! ஸ்டேட்டஸை லைக் செய்து பாருங்கள்!

வாட்ஸ்ஆப்பில் ஆன்லைனில் இருந்தால் இனி எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்!
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |





