வாட்ஸ் ஆப் செயலில் ஆன்லைனில் இருந்தால் இனி எளிதாக மற்றவர்கள் தெரிந்துகொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ்ஆப்பிலும் புதுப்புது அப்டேட் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் 'யூசர் நேம்' (User name) எனும் பயனாளர் பெயர் இடம்பெறும் புதிய வசதி அறிமுகமானது.
இதன் தொடர்ச்சியாக, வாட்ஸ்ஆப்பில் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என இனி எளிதாக தெரிந்துகொள்ள முடியும். முன்னதாக ஒருவரது தொடர்பை / எண்ணை கிளிக் செய்து உள்ளே சென்று பார்த்தால்தான் அவர் ஆன்லைனில் இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியும். ஆனால் இனி வாட்ஸ்ஆப் முகப்பு பக்கத்திலேயே அதை தெரிந்துகொள்ள முடியும்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஆன்லைனில் இருந்தால் மற்றவர்களுக்குத் தெரியும்படி, நமது ப்ரொபைல் புகைப்படத்தின் பக்கத்தில் ஒரு பச்சை நிற புள்ளி (Green dot) ஒளிரும்.
அதேபோல இனி வாட்ஸ்ஆப்பிலும் ஆன்லைனில் இருந்தால் நம் ப்ரொபைல் மீது பச்சை நிற டாட் தெரியும். இதன் மூலமாக அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். நாம் ஆன்லைனில் இருந்தாலும் மற்றவர்களுக்கும் காட்டும்.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த புதிய வசதி, ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஆனால்.... இதைத் தவிர்ப்பது எப்படி?
வாட்ஸ்ஆப் செயலில் ஆன்லைனில் இருந்தாலும் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாட்ஸ்ஆப்பில் ஏற்கெனவே ஒரு 'ஆப்ஷன்' உள்ளது.
அதன்படி 'privacy' செட்டிங்க்ஸில் 'Last seen and online' என்பதை கிளிக் செய்து அதில் 'Nobody' என்பதை செலக்ட் செய்தால் நீங்கள் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. அதேபோல மற்றவர்கள் ஆன்லைனில் இருந்தாலும் உங்களுக்குத் தெரியாது.
இந்த ஆப்ஷனை கிளிக் செய்பவர்களுக்கு 'க்ரீன் டாட்' தெரியாது என்றும் கூறப்படுகிறது.
Summary
WhatsApp launched the green dot for online contacts on Android
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










