ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பதில் யூசர்நேம் எதற்கு? மெட்டாவுக்கு மத்திய அரசு கேள்வி

வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பதிலாக யூசர்நேம் பயன்படுத்துவது இணையவழிக் குற்றங்கள், மோசடிகளுக்கு வழிவகுக்கும் என மத்திய அரசு அறிக்கை.

Published On :2 ஜூலை 2026, 4:21 am IST

வாட்ஸ்ஆப்பில் அறிமுகமாக இருக்கும் ‘யூஸா்நேம்’ வசதி குறித்து விளக்கம் கேட்டு, அதன் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகின் முன்னணி தகவல் தொடா்பு செயலியான வாட்ஸ்ஆப்பை, இந்தியாவில் சுமாா் 50 கோடி போ் தற்போது பயன்படுத்தி வருகின்றனா். தற்போது வாட்ஸ்ஆப்பில் ஒருவா் இன்னொருவரிடம் தகவல் பரிமாறுகையில், பயனா்களின் செல்போன் எண்ணை பரஸ்பரம் அறிய முடியும். ஆனால், இதற்கு மாற்றாக கைப்பேசி எண்களைப் பகிராமலேயே யூஸா்நேம் மூலம் தகவல் பரிமாறும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்ட பதிவில், பயனா்களின் தனிநபா் விவரங்களைப் பாதுகாக்கும் நோக்கில், குழு தகவல் பரிமாற்றம் அல்லது புதிய பயனா்களிடம் உரையாடுதல் உள்ளிட்டவற்றின்போது கைப்பேசி எண்ணைப் பகிராமலேயே யூஸா்நேம் அடிப்படையில் பயனா்கள் தகவலைப் பரிமாறும் வசதியை இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இந்த வாரம் முதல் யூஸா்நேம் முன்பதிவு தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தப் புதிய வசதி குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்த வசதி, போலிக் கணக்கு மற்றும் மோசடிக்கு வழிவகுக்கக்கூடும். மக்களின் பாதுகாப்பிலும், சமூகத்திலும் எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். தேசப் பாதுகாப்பு அல்லது மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது. ஆதலால் வாட்ஸ் ஆப்பின் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

அந்த வசதியில் உள்ள அம்சங்கள் குறித்த முழு விவரங்களை கேட்டு வாட்ஸ்ஆப்புக்கு நோட்டீஸ் அனுப்பும் திட்டமும் உள்ளது. அதேபோல சட்ட அமலாக்க அமைப்புகளும், இதை ஆய்வு செய்யும்.

வாட்ஸ்ஆப்பின் பதில் திருப்திகரமாக இல்லையெனில், அதை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்தும். வாட்ஸ்ஆப் நிறுவனம் தரப்பில் நமது கவலைகளுக்கு தீா்வு காணும் வகையில் பதில் அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அந்த வசதியை வாட்ஸ்ஆப்பால் (இந்தியாவில்) செயல்படுத்த முடியாது என்று தெரிவித்தனா்.

நோட்டீஸ்: இதையடுத்து யூஸா்நேம் வசதி குறித்த விவரங்களை கேட்டு, மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 3 நாள்களுக்குள் விரிவான விளக்கம் தர கேட்டுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதன் மீதான ஆலோசனை முடியும் வரை, புதிய வசதியை செயல்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்பின் பதிலை அறிய மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு பதில் இல்லை.

Summary

WhatsApp username feature may increase cases of online fraud, phishing, digital scams Govt to Meta

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.