தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த தோழமை கட்சிகளுடனான கூட்டணி பெயர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (ஜூலை 1) தெரிவித்தார்.
தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கவும் இக்கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தோழமை கட்சித் தலைவர்களை தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இவர்கள் அழைப்பின்பேரில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
இக்கூட்டத்தில் தவெக அரசுக்கு தோழமை கட்சிகள் சார்பில் முதலில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் தோழமை கட்சிகளுக்கு தவெக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டணியாக செயல்பட வேண்டிய முதல் கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர், காதர் மொகிதீன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஆலோசனைக் கூட்டம் குறித்து மாணிக்கம் தாகூர் பேசியதாவது:
தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தின் அனைவரின் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டன. இந்தக் கூட்டம் நல்ல தொடக்கம். நேர்மறையாக இக்கூட்டம் நடந்து முடிந்தது. தவெக அரசு அமைய ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மிக விரைவில் அடுத்த கூட்டம் நடைபெறும். அடுத்த கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் குறித்து முடிவு செய்யப்படும்.
தவெகவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்கள் இந்தியா கூட்டணியில் இடம்பெறுவது குறித்து பேசப்படும். தற்போது, தவெக தோழமை கூட்டணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Name of TVK alliance not yet decided Manickam Tagore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தோழமை கட்சி ஆலோசனை நிறைவு! கூட்டத்தில் பேசியது என்ன?
தவெக தோழமை கட்சிக் கூட்டம்: இடதுசாரிகளுக்கு நேரில் அழைப்பு!

உஜ்வாலா சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு: மாணிக்கம் தாகூர் கண்டனம்!
தேர்தல் தோல்வி! சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸ் மீது தாக்குதல் ஏன்? மாணிக்கம் தாகூர்
விடியோக்கள்

”TVKவின் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள்!” மாணிக்கம் தாகூர்

ஸ்டாலினுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்! | TVK | DMK

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK




