வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள ‘கஸ்டம் லிஸ்ட்’ வசதி மூலம் உரையாடல்களை வகைப்படுத்தி வைக்கலாம்.
உலகளவில் 330 கோடிக்கும் (3.3 பில்லியன்) அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் செயலி 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
வாட்ஸ்ஆப் என்பது வெறும் உரையாடல்களுக்கு மட்டுமல்லாமல், அலுவல் சார்ந்த வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளியிலிருந்து வரும் அறிவிப்புகள், வேலை செய்யும் நிறுவனங்கள் சார்ந்த குழுக்கள், செய்திக் குழுக்கள், குடும்பம் சார்ந்த குழுக்கள் போன்ற முக்கிய காரணிகளுக்கும் வாட்ஸ்ஆப் செயலியை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையில், தனிப்பட்ட நபர்களிடமிருந்து பெறும் செய்தி, குழுக்களிடமிருந்து பெறும் செய்தி என அனைத்தும் உரையாடல் என்ற பகுதியில் குவிந்து கிடக்கும். ஆகையால், இதில் எந்த செய்தியை நாம் பார்ப்பது, எவை முக்கியம் என்றெல்லாம் அடிக்கடி குழப்பம் ஏற்படுவதுண்டு.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள அம்சம்தான் ‘கஸ்டம் லிஸ்ட்’. இதன்மூலம் உறவினர்கள், நண்பர்கள், விற்பனையாளர்கள், ஊழியர்கள் என உரையாடல்களை வகைப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வசதியைப் பயன்படுத்த, வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள சாட்ஸ் பகுதிக்கு சென்றால், அங்கு வலதுபுறத்தின் மேலே கூட்டல் (+) குறி இருக்கும். அதனை க்ளிக் செய்து வகைப்படுத்தக் கூடிய பெயரை உள்ளிட்டு நபர்களையோ அல்லது குழுக்களையோ சேர்த்துக் கொள்ளலாம்.
இதன்மூலம், நமக்குத் தேவையான உரையாடல்களைத் தேடி ஸ்க்ரோல் செய்யும் நேரம் குறைவதுடன், மெசேஜ்களை தவறவிடாமல் படிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
You can categorize conversations using the ‘Custom List’ feature in the WhatsApp app.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









