FOLLOW US

ON GOOGLE DISCOVER

தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

வாட்ஸ்ஆப் சேனல் அப்டேட்டுகளை பார்ப்பது எத்தனை பேர்? அட்மினுக்கு புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் சேனல் அப்டேட்டுகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதை இனி அட்மினால் பார்க்க முடியும்...

News image

வாட்ஸ்ஆப் சேனல் - படம் / நன்றி - வாட்ஸ்ஆப்

Updated On :27 ஜூலை 2026, 4:00 pm IST

வாட்ஸ்ஆப் சேனல் அப்டேட்டுகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதை இனி அட்மினால் பார்த்து தரவுகளை எடுத்துக்கொள்ள முடியும்.

அதாவது, வாட்ஸ்ஆப் சேனல் அப்டேட்டுகளை எத்தனை ஃபாலோயர்ஸ் (பின்தொடர்பவர்கள்) பார்க்கின்றனர் தனிப்பட்ட முறையில் அட்மினால் பார்க்க முடியும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ்ஆப் உலகம் முழுவதும் பயனர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 85 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்.

பயனர்களின் சேவையை அதிகரிக்கும் வகையில், அடிக்கடி புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவரும் வாட்ஸ்ஆப் நிறுவனம், தற்போது புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பலரும் எதிர்பார்த்த வகையில் வாட்ஸ்ஆப் சேனலில் பதிவிடப்படும் அப்டேட்டுகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதை இனி அட்மினால் பார்க்கக்கூடிய வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்பு வாட்ஸ்ஆப் பயனர்கள் வைக்கும் ஸ்டோரிக்களை மட்டுமே எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பதை பார்க்க முடியும். ஆனால், தற்போது வாட்ஸ்ஆப் சேனலில் பதிவிடப்படும் அப்டேட்டுகளையும் எத்தனை ஃபாலோயர்ஸ் பார்க்கின்றனர் என்பதை அட்மினால் அறிய முடியும்.

ஆன்டிராய்டு மற்றும் ஐஓஸ் பயனாளர்களால் இந்த அம்சத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

படைப்பாளர்கள், வணிகர்கள் மற்றும் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இந்த அம்சத்தை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது. தங்களை பின் தொடர்பவர்கள் எத்தகைய பதிவுகளுக்கு எதிரொலிக்கிறார்கள் என்பதை புரிந்து அதற்கேற்ப செயல்படும் வகையில் இந்த அம்சம் உதவிகரமாக இருக்கும் என வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது.

பீட்டா வெர்ஷன் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் வாட்ஸ்ஆப் சேனலில் அட்மின் பதிவிடும் ஒவ்வொரு பதிவுக்கும் கீழே எத்தனை பயனர்கள் குறிப்பிட்டப் பதிவைப் பார்த்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

Summary

private view counts for WhatsApp channel admins

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.