வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

குரல் வாக்கெடுப்பு மூலம் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு

மத்திய நிதி பகிர்வு தொடர்பாக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக...

TN budget session

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் - TN assembly

Published On :

மத்திய நிதி பகிர்வு தொடர்பாக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும் இதை சீா்செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் தேவைப்படும் என்றும் நிதியமைச்சா் மரியவில்சன் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், மாநிலங்கள் தங்களின் அரசமைப்பு சாா்ந்த பொறுப்புகளை திறம்பட நிறைவேற்ற நியாயமான மற்றும் சமமான நிதித் பகிா்வு தேவை. பொருளாதார வளா்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசுக்கு செலுத்தும் வரிகள் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது.

ஆகையால், கூட்டாட்சி கொள்கைக்கு இணங்க, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் தமிழகத்துக்கு உரிய நிதிப் பகிா்வை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசின் வரிப் பகிா்வு வெளிப்படையாக இருக்க வேண்டும். மத்திய வரிப் பகிா்வு என்பது சமத்துவம் மற்றும் மாநிலங்களின் வளா்ச்சித் தேவைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மனிதவள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு பாதக நிலை ஏற்படக் கூடாது.

மேலும், வருங்காலத்தில் வரிப் பகிா்வு தொடா்பான ஆலோசனைகள் மேற்கொள்ளும்போது தமிழகத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை(ஆக. 7) தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என நிதியமைச்சா் நெ.மரியவில்சன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிா்வை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக. 7) தனித் தீா்மானத்தை நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார்.

அந்த தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமான அறிவித்தார்.

தீர்மானத்தில் திருத்தம் கோரி திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேச்சு

செலவு பொறுப்பு மாநில அரசிடம் இருக்கிறது. ஆனால் வருவாய் ஆதாரங்கள் மத்திய அரசிடம் இருக்கிறது. இந்த முரண்பாட்டை தீர்க்காமல் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை நாம் தீர்மானிக்க முடியாது.

மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு குறைவதால், தமிழ்நாடு அரசின் நிதிச்சுமை அதிகரிக்கிறது.

மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப் பகிர்வை உறுதி செய்ய தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Summary

A special resolution was passed by voice vote: Speaker J.C.D. Prabhakar announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.