
வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!
வடகிழக்கு பருவமழை மற்றும் டெங்கு தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து 2 -வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை ...
நேற்று நடைபெற்ற ஆலோசனையில்... - DIPR
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக, காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதையடுத்து அதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் நேற்று காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து இன்று தேனி, தென்காசி, கரூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துறைசார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
பருவமழை நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்ரமிப்பு நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
Summary
CM vijay meeting with officials on northeast monsoon
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






