இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: அமைச்சர்கள், ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துவது குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் நாளை (செப். 21) ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் அதிக மழை தரும் காலமாக வடகிழக்குப் பருவமழை காலம் இருந்து வருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான இக்காலகட்டத்தில் புயல் பாதிப்புகளும் ஏற்படும். மாநிலத்தின் ஒட்டுமொத்த ஆண்டு மழைப்பொழிவில் சுமார் 48 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை இந்த பருவமழை மூலமே கிடைக்கிறது.

ஆண்டுதோறும் இக்காலகட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மாநில அரசும் தீவிர முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்.

இந்த நிலையில், இந்தாண்டில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் திங்கள்கிழமை (செப். 21) ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மதியம் 12 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி படுகை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்கின்றனர். மேலும், இந்தக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீர்நிலைகளைத் தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்துதல், பலவீனமான மின்கம்பங்களைச் சீரமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறும்.

Summary

Northeast Monsoon Preparedness: CM Vijay to hold consultations with ministers and district collectors tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.