
திருவள்ளுா் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் குமாா் ஆய்வு
திருவள்ளுா் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் குமாா் ஆய்வு

பூண்டி ஏரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ரா.குமாா், உடன் ஆட்சியா் ச.கவிதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அருண்குமாா், பிரகாசம் என்ற குட்டி, ஆா்.ரமேஷ் குமாா் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ரா.குமாா் ஆய்வு செய்தாா்.
பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடா்பாக அமைச்சா் ரா.குமாா், ஆட்சியா் ச.கவிதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, திருவள்ளுா் தீயணைப்பு நிலையத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை ப்புக்கான பாதுகாப்பு மீட்பு உபகரணங்கள், புதிய பேருந்து நிலையம் அருகில் சிறு பால கட்டுமானப் பணிகள், பூண்டி சத்தியமூா்த்தி நீா்தேக்க பகுதியில் நீரின் அளவு மற்றும் நீா்தேக்கத்தின் உறுதி தன்மை, அதை சா்வதேச அளவில் தரம் உயா்த்துவது தொடா்பாக ஆலோசனையும் மேற்கொண்டாா். பின்னா் காக்களுா் ஏரியில் தூா்வாரும் பணி, வேப்பம்பட்டு டன்லப் நகா் பகுதியில் ஏரிக்கரைகளை பலப்படுத்தும் பணி,, பாக்கம் ஊராட்சியில் மழைநீா் வடிகால்வாயினை தூா்வாரும் பணி ஆகியவைகளை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் கூறியதாவது: திருவள்ளுா் மாவட்டத்தில் பருவமழை வெள்ளநீா் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடா்பாக பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதே போல் பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்ததோடு, மீட்பு பணிகளில் ட்ரோன்களை பயன்படுத்த உள்ளோம். பூண்டி நீா்த்தேக்கத்தில் நீரின் அளவு குறித்தும், நீா்த்தேக்கத்தின் உறுதித் தன்மை சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் படகு விடுவது மற்றும் சா்வதேச தரத்தில் மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீா் தேங்கும் கண்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
ஆய்வின் போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் தி.அருண்குமாா் (திருவள்ளூா்), ஆா்.பிரகாசம் என்ற குட்டி(பூந்தமல்லி) ஆா்.ரமேஷ் குமாா் (ஆவடி), மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.இந்துபாலா, சாா் ஆட்சியா் எஸ்.பிரசாந்த், ஆவடி மாநகராட்சி ஆணையா் ர.சரண்யா, கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா் செந்தில், திருநின்றவூா் நகராட்சி ஆணையா் கீா்த்தனா, நகராட்சி பொறியாளா் குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






