இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாயைவிட செலவு அதிகமா?

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய், செலவு குறித்து...

TN Govt

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Published On :

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் தமிழக அரசின் வருவாயைவிட ரூ. 20,349 கோடி செலவு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு மாநில ஜிஎஸ்டி, முத்திரைத் தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணம், மாநில ஆயத்தீர்வை உள்ளிட்டவை மூலம் வரி வருவாயும், சேவைக் கட்டணங்கள், அபராதம் உள்ளிட்டவை மூலம் வரியல்லாத வருவாயும் கிடைக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், இலவசத் திட்டங்கள், அரசின் மானியங்கள் உள்ளிட்டவை மூலம் அரசுக்கு செலவும் ஏற்படுகிறது.

இதன்படி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கடந்த 5 மாதங்களில் வரி மற்றும் வரியல்லாத வருவாயாக மாநில அரசுக்கு ரூ. 1,17,791 கோடி கிடைத்துள்ளது. மாநில ஜிஎஸ்டி வருவாயாக ரூ. 34,144.06 கோடியும், முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் ரூ. 10,493.30 கோடியும், வர்த்தகம் மீதான வரி மூலம் ரூ. 28,164.79 கோடியும், மாநில ஆயத்தீர்வை மூலம் ரூ. 5,214 கோடியும், மத்திய அரசின் வரி பங்கின் வாயிலாக ரூ. 24,188 கோடியும், நிலம் விற்பனையில் ரூ. 57.16 கோடியும், இதர வரி மற்றும் தீர்வைகள் வாயிலாக ரூ. 6,843 கோடியும், வரியல்லாத வருவாய் மூலம் ரூ. 5,149 கோடியும், மத்திய அரசின் மானியங்கள் மூலம் ரூ. 3,537 கோடியும் கிடைத்துள்ளது.

இதே காலகட்டத்தில் அரசுக்கு ரூ. 1,38,140 கோடி செலவும் ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்காக ரூ. 25,991 கோடியும், ஓய்வூதியத்தின் பங்காக ரூ. 21,008 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 5 மாதங்களில் தமிழக அரசு ரூ. 30,021 கோடி கடன் வாங்கியுள்ளது.

கடந்த 5 மாதங்களில் வருவாயைவிட செலவு கூடுதலாகி, ரூ. 20,349 கோடி வருவாய்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

Summary

TamilNadu government's revenue and expenditure in the last 5 months

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.