4 மாதங்களில் டாஸ்மாக் மூலம் ரூ. 17,854 கோடி வருவாய்!
தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் கடந்த 4 மாதங்களில் ரூ. 17, 854 கோடி வருவாய் கிடைத்தது குறித்து...

டாஸ்மாக் - பிரதிப் படம்
தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் கடந்த 4 மாதங்களில் ரூ. 17.8 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை விற்பனைக் கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் மீது ஆயத்தீர்வை மற்றும் மதிப்புக் கூட்டு வரி போன்றவை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
இதன்படி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ஆயத்தீர்வை மூலம் ரூ. 4,065.75 கோடியும், மதிப்புக் கூட்டு வரி மூலம் ரூ. 13,788.89 கோடியும் கிடைத்துள்ளது. மொத்தமாக தமிழக அரசுக்கு கடந்த 4 மாதங்களில் டாஸ்மாக் மூலம் ரூ. 17,854.63 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வரும்நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமன்று என்று சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Government earns ₹17,854 crore revenue through TASMAC in 4 months
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





