உஷார்!! முதல்வர் விஜய்யின் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி

மத்திய பிரதேசத்தில் முதல்வர் விஜய்யின் பெயரில் பொதுமக்களிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 8:32 am IST

மத்திய பிரதேசத்தில் முதல்வர் விஜய்யின் பெயரில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய்க்கு சமீபமாக வட மாநிலங்களில் ரசிகர்கள் அதிகரித்து வருகிறது. மேலும், அவர்தான் அடுத்த பிரதமர் எனக் கூறி, சமூக ஊடகங்களில் சித்திரிப்பு விடியோக்களை வெளியிட்டும், கருத்துகள் பதிவிட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை என்ற பெயரில் இணைய வழியில் பண மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது.

தாங்கள் விஜய்யின் அறக்கட்டளையில் இருந்து பேசுவதாகவும், ஏழை எளிய மக்களுக்கு உதவ விரும்புவதாகவும் மத்திய பிரதேசத்தில் மோசடி கும்பல் கிளம்பியுள்ளது.

விஜய்யின் அறக்கட்டளையில் கல்விக் கடன்கள், தொழிற்கடன்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் வழங்கப்படுவதாகவும் மக்களை மோசடி கும்பல் ஏமாற்றி, கடன்கள் வழங்குவதற்கு ஜிஎஸ்டி கட்டணம், சரிபார்ப்புக் கட்டணம், பதிவுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் கட்ட வேண்டும் எனக் கூறி, ரூ. 1,000 முதல் ரூ. 50,000 வரையில் வசூலித்து ரூ. 10 லட்சம் வரையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, கட்டணம் செலுத்தியபிறகு, பணம் வாங்கியவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல், தாங்கள் மோசடிக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள், மோசடி கும்பல் குறித்து மாநில காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, இந்தூர் குற்றத் தடுப்புப் பிரிவில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக சைபர் காவல்துறையின் உதவியையும் கோரியுள்ளனர்.

Summary

Fraudsters Use TN CM Vijay's Name to Dupe Citizens in Indore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.