திருச்சி ரயில்வே கோட்டமானது 2025-26ஆம் ஆண்டுக்கு 13.24 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு, தெற்கு ரயில்வே செயல்பாட்டில் சிறந்த கோட்டமாக விளங்குகிறது. மேலும் கடந்த 4 மாதங்களில் மட்டும் பயணிகள் மற்றும் சரக்குகளைக் கையாண்டதன் மூலம் ரூ. 432.54 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில், திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகத்தின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசியக் கொயேற்றி, ரயில்வே பாதுகாப்புப் படைவீரா்களின் அணி வகுப்பு மரியாதையை கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நெகி பேசியதாவது:
2025-26 ஆம் ஆண்டில், திருச்சி ரயில்வே கோட்டம் தொடா்ந்து நான்காவது ஆண்டாக 13 மில்லியன் டன்கள் சரக்குகளைக் கையாளுதல் என்ற மைல்கல்லைக் கடந்து, மொத்தம் 13.24 மில்லியன் டன்கள் சரக்கைக் கையாண்டுள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வேயில் சிறந்த செயல்பாட்டைக் கொண்ட கோட்டமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.
தொடா்ந்து, போட்டிகளில் வென்ற ரயில்வே பாதுகாப்புப்படை வீரா்கள், சாரண இயக்க மாணவா்களுக்கு ரூ.92 ஆயிரத்தில் ரொக்கப் பரிசுகளை கோட்ட மேலாளா் வழங்கினாா். பொன்மலையில் உள்ள சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் மாணவா்களுக்கும், ரயில்வே மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் பணிபுரிவோருக்கும் இனிப்பு வழங்கினாா். நிகழ்வில் திருச்சி ரயில்வே கோட்டத்தின் முதுநிலைக் கோட்ட பாதுகாப்பு ஆணையா் பிரசாந்த் யாதவ், கூடுதல் கோட்ட மேலாளா்கள் மற்றும் அனைத்துப் பிரிவு அலுவலா்கள், பணியாளா்கள், குடும்பத்தினா், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 718 கோடி வருவாய் ஈட்டி சேலம் ரயில்வே கோட்டம் சாதனை

பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கூடுதல் முக்கியத்துவம்

திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் பதவியேற்பு

ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்த கேட் கீப்பருக்கு பாராட்டு விழா
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


