
முதல்முறை! கிறிஸ்துவர்கள் புனிதப் பயணம் செல்ல உதவித்தொகை வழங்கிய ஜெயலலிதா! பேரவைத் தலைவர்
இந்தியாவிலேயே முதல்முறையாக கிறிஸ்துவர்கள் புனிதப் பயணம் செல்ல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவித்தொகை அளித்ததாக பேரவைத் தலைவர் பேசியது பற்றி...

பேரவையில்... - tn assembly
திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை என தவெக எம்எல்ஏ முஸ்தபா என்னும் மதார் பதுருதீன் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேரவையில் சிறுபான்மையினர் நலம் குறித்து பேசிய தவெக உறுப்பினர் முஸ்தஃபா, "அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பல விஷயங்களைச் செய்தார்கள். ஆனால் திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீதிலிருந்து உயர்த்தி தருகிறோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக, அதனைச் செய்யவில்லை. நாங்கள் 10 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டோம், உயர்த்தி தருகிறோம் என்று சொன்னார்கள், ஆனால் செய்யவில்லை" என்று கூறினார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
தவெக எம்எல்ஏவை கண்டித்து அவரை அமரும்படி பேரவைத் தலைவர் கூறினார்.
இதன்பின்னர் பேசிய பேரவைத் தலைவர், "இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுக செய்தவற்றை சொல்ல அனுமதி அளித்தேன்.
இன்னொரு முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 'ஹஜ் பயணத்திற்கு நிறைய செய்கிறீர்கள். கிறிஸ்துவர்கள் புனித பயணம் செல்வதற்கு ஏன் செய்வதில்லை?' என்று அவரிடம் கேட்டேன். உடனடியாக அவர் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் விழா நடத்தச் சொல்லி கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்வதற்கு 500 பேருக்கு தலா ரூ. 20,000 கொடுத்தார். முந்தைய ஆட்சியைவிட இந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு செய்யவிருப்பதாக அமைச்சர் கூறுகிறார்" என்றார்.
Summary
Jayalalithaa provided financial assistance for Christians to undertake a pilgrimage: Assembly Speaker
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





