அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

முதல்வரைப் புகழ்ந்த அமைச்சர் சரத்குமார்! குறுக்கிட்ட பேரவைத் தலைவர்!

முதல்வர் விஜய்யைப் புகழ்ந்த அமைச்சர் சரத்குமாரின் பேச்சை பேரவைத் தலைவர் நிறுத்தியது பற்றி...

News image

அமைச்சர் சரத்குமார் | பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் - Tn assembly

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:22 am IST

முதல்வர் ஜோசப் விஜய்யை நீண்ட நேரம் புகழ்ந்த மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமாரின் பேச்சை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் குறுக்கிட்டு நிறுத்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு, மனிதவள மேலாண்மை ஆகிய நான்கு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் சரத்குமார், எல்லா புகழும் தளபதிக்கே என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கினார்.

தொடர்ந்து, எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி, எங்கும் நோக்கிலும் வெற்றி, எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என முதல்வர் விஜய்யைப் புகழ்ந்த நிலையில், அவரது பேச்சை பேரவைத் தலைவர் குறுக்கிட்டார்.

இதையடுத்து, மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் சரத்குமார் பதிலளிக்க தொடங்கினார்.

முன்னதாக, கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் சர்ச்சைப் பேச்சுக்கு அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Minister Sarathkumar praised the Chief Minister! The Speaker intervened!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.