புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்...

Assembly Speaker objects to Aadhav Arjunas remarks

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | பேரவைத் தலைவர் - TN

Published On :

பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு பேரவைத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து ஆதவ் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

கோவையில் மாணவன் அமுதன் கொலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்து அதன் மீது உரையாற்றினார்.

போதைப்பொருள் புழக்கம் குறித்து தகவல் கொடுத்த மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துப் பேசினார்.

அப்போது திமுக மீது ஆதவ் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அவையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

அப்போது ஆதவ் அர்ஜுனா, "அங்கு 57 பேர்தான் இருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் எழுந்தால் உங்களால் பேசவே முடியாது" என்று கூறினார்.

இதற்கு பேரவைத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கடைசி வரிகள் மட்டும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது" என்று கூறினார்.

பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக அமைச்சர் ஆதவ் கூறினார்.

இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ஆதவ் பேசுகையில், "100 நாள்களில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க முடியாது. 2020க்கு முன் போதைப்பொருள் கலாசாரம் தமிழகத்தில் இல்லை. போதைப்பொருள் புழக்கத்தை உருவாக்கியதே திமுகதான்" என்று கடுமையாக விமர்சித்தார்.

Summary

Assembly Speaker objects to Aadhav Arjunas remarks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.