2020க்கு முன் போதைப்பொருள் கலாசாரம் தமிழகத்தில் இல்லை என்றும் போதைப்பொருள் புழக்கத்தை உருவாக்கியதே திமுகதான் என்றும் பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
கோவையில் மாணவன் அமுதன் கொலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்து அதன் மீது உரையாற்றினார்.
அப்போது உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துப் பேசுகையில்,
"மாணவர்கள் அமுதன், தனுஷ் ஆகியோர் எங்கள் குடும்பத்தினர், சகோதரரைப் போன்றவர்கள். எங்கள் முதல்வர், அந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் தாய் பக்கம்தான் நிற்பார் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.
விசாரணையில் எந்த அரசியல் அழுத்தமும் ஏற்படாது. நானும் அமைச்சர் ராஜ்மோகனும், தனுஷ் வீட்டிற்கு சென்றோம். 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திமுக பற்றி ஆதவ் அர்ஜுனா பேச ஆரம்பித்தபோது, திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆதவ் அர்ஜுனா, "அங்கு 57 பேர்தான் இருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் எழுந்தால் உங்களால் பேசவே முடியாது" என்று கூறினார்.
ஆதவ் அர்ஜுனா பேச்சை ஏற்க முடியாது என்று கூறி அவைக் குறிப்பில் இருந்து அதை நீக்குவதாக பேரவைத் தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆதவ் பேசுகையில், "எதிர்க்கட்சித் தலைவர், அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். நாங்கள் அமைதியாக இருந்தோம். நாங்கள் பேசும்போது அவர்கள் கேட்க வேண்டும்.
100 நாள்களில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க முடியாது. 2020க்கு முன் போதைப்பொருள் கலாசாரம் தமிழகத்தில் இல்லை. திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடும் பாலியல் குற்றங்களும் அதிகரித்தன.
இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த திமுக உறுப்பினர் மீது அன்றைய திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
ஒவ்வொரு ஆண்டும் 40 -50% வழக்குகள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் புழக்கத்தை அடித்தளத்தில் உருவாக்கியதே திமுகதான். இதனால்தான் மக்கள் உங்களை தூக்கி எறிந்திருக்கிறார்கள். உங்கள் தோல்விக்கான காரணம் போதைப்பொருள் பழக்கவழக்கம். 100 நாள்களில் போதைப்பொருள் புழக்கம் உருவாகவில்லை" என்றார்.
Summary
There was no drug culture in Tamil Nadu before 2020: Aadhav Arjuna
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






