முதல்வர் ச. ஜோசப் விஜய்யை புகழ்ந்த வேளாண் அமைச்சர் வினோத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு உருவானது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் நேற்று (ஆக. 6) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக. 6) முதல்முறையாக தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட் கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் ஆர். வினோத், முதல்வர் விஜய்க்கும், தனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து உரையை வாசித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் வினோத், “உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி ஊழல் ஒவ்வொன்றையும் களை எடுத்து சமத்துவம் எனும் செடி வளர்த்து மக்களாட்சி எனும் பெரும் மரத்தை பிடித்து நிற்கும் கோட் சூட் போட்ட விவசாயி” எனப் புகழாரம் சூட்டினார்,
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் அங்கு சலசலப்பான சூழல் உருவானது. அதைத்தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டில் இருப்பதை மட்டும் படிக்க பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அமைச்சரிடம் அறிவுறுத்தினார்.
அவரின் அறிவுரையைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டில் உள்ள தகவல்களை மட்டும் அமைச்சர் ஆர். வினோத் படித்து வருகிறார்.
Summary
A brief commotion arose in the Legislative Assembly after DMK members opposed Agriculture Minister Vinoth for praising Chief Minister S. Joseph Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையிலும்...! அமைச்சர் வினோத்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!

சாலை மறியலுக்கு இடையே சென்ற வாகன ஓட்டியை தாக்கிய திமுகவினர்! அமைச்சர் ராஜ்மோகன் பகிர்ந்த காணொலி

வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாயிகளின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் - அமைச்சர் வினோத்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK




