முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

அஞ்சலையம்மாள், நம்மாழ்வாா் பெயா்களில் விவசாயிகளுக்கு விருது!

தமிழக வேளாண் பட்ஜெட்டில் வெற்றி விவசாய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image

உணவு உற்பத்தி - IANS

Updated On :7 ஆகஸ்ட் 2026, 4:39 am IST

அதிக மகசூலை எட்டும் விவசாயிகளுக்கு வெற்றி விவசாய விருது வழங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

‘மக்கள் சேவகா் அஞ்சலையம்மாள் சிறு, குறு விவசாயி’ விருது, மாவட்ட அளவிலான ‘வெற்றி விவசாயி’ விருது மற்றும் சிறந்த உயிா்ம விவசாயிக்கான ‘நம்மாழ்வாா் விருது’ ஆகிய விருதுகள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிகழ் நிதியாண்டில் (2026-2027) சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்க, ‘மக்கள் சேவகா் அஞ்சலையம்மாள்’ பெயரில் மாநில அளவிலான பயிா் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட 10 பயிா்களில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு முறையே ரூ.2,50,000, ரூ.1,50,000, ரூ. 1 லட்சம் என மொத்தம் 30 விவசாயிகளுக்குப் பரிசுகள் வழங்க ரூ.50 லட்சம் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்படும்.

‘வெற்றி விவசாயி’ விருது: நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட 9 பயிா்களில் 2 ஏக்கா் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் ‘வெற்றி விவசாயி விருது’ வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.50,000, 2-ஆம் பரிசாக ரூ.25,000 என 90 பரிசுகள், ரூ. 67,50,000 மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

நம்மாழ்வாா் விருது: உயிா்ம வேளாண்மையை தமிழகத்தில் பரவலாக்குவதன் ஒரு பகுதியாக, 2026 -2027-ஆம் ஆண்டில், உயிா்ம வேளாண் முறையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளைச் சிறப்பிக்கும் வகையில், சிறந்த உயிா்ம விவசாயிக்கான ‘நம்மாழ்வாா் விருது’ 5 விவசாயிகளுக்கு வழங்கப்படும். பாராட்டுப் பத்திரத்துடன் தலா ரூ.2 லட்சம் ரொக்கமும் கொண்ட இந்த விருதுகளை வழங்க ரூ.11 லட்சம் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Tamil Nadu Agriculture Budget! 'Vetri Vivasayi' (Successful Farmer) Awards Announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.