FOLLOW US

ON GOOGLE DISCOVER

கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரை

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்...

News image

அமைச்சர் வினோத் உரை - TN

Updated On :6 ஆகஸ்ட் 2026, 11:11 am IST

எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அவர் பேசியதாவது,

"இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள 'சூப்பர் எல் நினோ' நிகழ்வினால் நாடு முழுவதும். குறிப்பாக, குறுவைப் பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள 'மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டுத் ' (District Agricultural Contingency Plan) மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாம்பழத்திற்கு, குறிப்பாக பெங்களூரா இரக மாம்பழத்திற்குக் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலை இருந்தது. எனவே, பெங்களூரா இரக மாம்பழத்திற்கு மத்திய அரசின் சந்தை இடையீட்டுத் திட்டத்தில், விலை வித்தியாசத் தொகை வழங்க மத்திய அரசுக்கு உரிய கருத்துருவினை அனுப்பி முதல் முறையாக ஒப்புதல் பெறப்பட்டது.

இதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்படுவதற்குள் பெங்களூரா இரகத்தின் அறுவடை முடிவுற்ற நிலையில் 6 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருந்தாலும், திட்ட நடைமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டிருப்பதால் இனி வருங்காலங்களில் இத்தகைய நிகழ்வுகளை விரைவாக எதிர்கொள்ள. வேளாண்மை-உழவர் நலத் துறை முற்றிலும் தயாராக உள்ளது" என்றார்.

Summary

TN Agriculture budget 2026: 12 districts affected by El Nino

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.