மக்களிடையே தளிர்க்கீரைகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகர்ப்புரப் பகுதிகளில் 20,000 தளிர்க்கீரை தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும் என்று பேரவையில் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
"ப்ரோக்கோலி, முட்டைக்கோசு, முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, கொண்டைக்கடலை, ஆளிவிதைகள், வெங்காயம், பச்சைப்பயறு, கொள்ளு, எள். கோதுமை. கீரை வகைகள் ஆகியவற்றின், 7 முதல் 21 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுக்கள், தளிர்க்கீரைகள் (Microgreens) என்றழைக்கப்படுகின்றன.
இந்த தளிர்க்கீரைகளில் முதிர்ந்த செடியினைவிட 40 மடங்கு வரை அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதாக அறியப்படுகிறது.
எனவே புதிய முயற்சியாக, பொதுமக்களிடையே தளிர்க்கீரைகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில், விதைகள், விதை வளர்ப்புத் தட்டுகள், தென்னைநார்க் கட்டிகள், நீர்த்தெளிப்புக் கருவி, வழிமுறைக் கையேடு ஆகியவற்றை உள்ளடக்கிய 20,000 தளிர்க்கீரை தொகுப்புகள் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகர்ப்புரப் பகுதிகளில் விநியோகம் செய்யப்படும்.
இதற்கென, 2026-27ஆம் ஆண்டில், 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.
Summary
TN Agriculture budget 2026: microgreens scheme for cities in tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேளாண் பட்ஜெட் நிறைவு! 130 நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர் வினோத்!
குறைந்த நீரில் அதிக மகசூல்! துளித் துளித் தண்ணீர் திட்டம்! பட்ஜெட்டில் அறிவிப்பு

இனி மழையில் நனையாது! விளைபொருள்களை பாதுகாக்க ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள்!
ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையிலும்...! அமைச்சர் வினோத்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


