வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள் என்னென்ன?

வேளாண் பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image

தென்னை மரங்கள். - கோப்புப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 12:11 pm IST

தென்னை மற்றும் பனை மரங்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் இன்றைய தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

தென்னைக்கான சிறப்புத் திட்டம்

தமிழ்நாட்டில் சுமார் 5 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி உற்பத்தி செய்யப்படுகின்றன. தென்னை சாகுபடியிலும் செய்யப்பட்டு சுமார் 670 கோடி தேங்காய்கள் சந்தைப்படுத்துவதிலும் தற்போது விவசாயிகள் சந்தித்து வரும் சவால்களைக் கருத்தில் கொண்டு பூச்சி நோய்த் தாக்குதல்களுக்குத் தீர்வளித்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், மதிப்புக்கூட்டலை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான இனங்களைக் கொண்டு "தென்னைக்கான சிறப்புத் திட்டம்" மொத்தம் 16 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

தென்னை டானிக் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் திறம்பட உறிஞ்சப்படுவதுடன், மரங்களின் வளர்ச்சித் திறன் மேம்பட்டு, பூக்கள் மற்றும் காய் பிடித்தல் அதிகரிக்கும். எனவே, தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, தென்னை மரங்களின் நலத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், 2026-27 ஆம் ஆண்டில், 86 ஆயிரம் ஏக்கரிலான தென்னை மரங்களுக்கு "தென்னை டானிக்" வழங்குவதற்காக 6 கோடியே 20 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தென்னையைத் தாக்கும் வேர்வாடல் நோய் மற்றும் சுருள் வெள்ளை ஈ ஆகியவற்றின் பாதிப்பால், 35 முதல் 80 விழுக்காடு வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இப்பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளுடன் நீடித்த, நிலையான உயிரி கட்டுப்பாட்டு முறைகளைத் தென்னை விவசாயிகளிடையே பெருமளவில் பரவலாக்கம் செய்திட 1,350 ஏக்கர் பரப்பளவில் 'அபெர்டோகிரைசா' என்ற இரைவிழுங்கிப் பூச்சிகள் மற்றும் 'கோகோகான்' நுண்ணுயிர்க் கலவை ஆகியவை 75 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஒரு கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயைத் திறம்படக் கட்டுப்படுத்த கிரைசோபெர்லா இரைவிழுங்கி. ஐசாரியா ஃபுமோசோரோசியா பூஞ்சை ஆகிய உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பெருமளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குமாறு பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், புதிதாக 5 தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் 3 கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியார் நகர், கண்ணம்பாளையம், தேனி மாவட்டம் வைகை அணை, விருதுநகர் மாவட்டம் தேவதானம் ஆகிய இடங்களில் புதிய கிரைசோபெர்லா உற்பத்தி மையங்களும், கன்னியாகுமரி மாவட்டம் புத்தளத்தில், ஐசாரியா ஃபுமோசோரோசியா உற்பத்தி மையமும் அமைக்கப்படும்.

தரமான தென்னங்கன்றுகள் கிடைப்பதை உறுதி விவசாயிகளுக்குக் செய்ய கரூர் முதலைப்பட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 15 ஏக்கர் பரப்பளவில் "புதிய தென்னை நாற்றுப்பண்ணை" ரூபாய் 48 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தமிழ்நாடு தென்னைப் பதப்படுத்தும் கழகம்

தென்னை விவசாயிகளின் வருமானத்தை நீடித்த நிலையான முறையில் பெருக்குவதற்கும், மதிப்புக் கூட்டுவதால் நீரா, தென்னை மற்றும் தென்னை சார்ந்த பொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கச்செய்யவும், நிலையான சந்தை வாய்ப்பினை உருவாக்கவும். தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை செயல்படுத்தும் விதமாகவும் "தமிழ்நாடு தென்னைப் பதப்படுத்தும் கழகம்" வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் 22 கோடியே 30 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்படும்.

இக்கழகத்தின் வாயிலாக, அறுவடைக்குப்பின் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள், பதப்படுத்துதல், தரக்குறியீடு இடுதல், சிப்பம் கட்டுதல், ஏற்றுமதி ஆகியவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், விரிவான சேவைகளை வழங்க ஏதுவாக, தென்னை வளர்ச்சி வாரியம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தோட்டக்கலைத் துறையுடன் ஒருங்கிணைந்து இக்கழகம் செயல்படும். நடப்பாண்டில், இதற்கென 5 கோடியே 30 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கொப்பரை விலை வீழ்ச்சியினைத் தடுத்து விலையினை நிலைப்படுத்த, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான "விலை ஆதரவுத் திட்டம்" உரிய நேரத்தில் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்" என்றார்.

பனை பாதுகாப்பு இயக்கம்

"கற்பக விருட்சம்" என்றழைக்கப்படும் பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து தமிழ்நாட்டின் மாநில மரமாகத் திகழ்ந்து வருகிறது. ஏறத்தாழ மூன்று இலட்சம் விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் பனை மரத்தின் வருவாயை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பனை மற்றும் பனைப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க அரசின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, 2026-27 ஆம் ஆண்டு முதல் "பனை பாதுகாப்பு இயக்கம்" தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

வெட்டுவதை இத்திட்டத்தில் பனை மரங்களை முறைப்படுத்துவதற்காக ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள மாவட்ட, வட்டாரக் குழுக்கள் முடுக்கிவிடப்பட்டு கண்காணிக்கப்படும்.

இத்துடன், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்கள் அமைத்தல், பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பனை பொருள் வளர்ச்சி வாரியத்தினால் பனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் அதற்கான உபகரணங்களும் வழங்குதல் முதலிய திட்டக்கூறுகள் இரண்டு கோடியே 10 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

இது தவிர, தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் பனை ஆராய்ச்சி நிலையத்தில், குட்டைப் பனை, விரைவில் காய்ப்புக்கு வரும் பனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் துரிதப்படுத்தப்பட்டு, அவற்றின் பலன்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு சேர்க்கப்படும் என்று கூறினார்.

Summary

Coconut seedling nursery in Karur; Coconut and Palmyra protection schemes in the budget

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.