வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

நவீனமயமாகும் பல்லாவரம், ஆவடி உழவர் சந்தைகள்! வேளாண் பட்ஜெட்

பல்லாவரம், ஆவடி உழவர் சந்தைகள் நவீனமயமாக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு.

News image

உழவர் சந்தை - dipr

Updated On :6 ஆகஸ்ட் 2026, 12:22 pm IST

சென்னையில் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்ற பல்லாவரம் மற்றும் ஆவடி உழவர் சந்தைகளை நவீனமயமாக்க வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள அமைச்சர் வினோத் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதில், உழவர் சந்தைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

உழவர் சந்தைகள் புனரமைப்பு

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் நடப்பாண்டில் 10 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள பல்லாவரம், ஆவடி உழவர் சந்தைகளை நவீன ஒருங்கிணைந்த உழவர் சந்தைகளாக மறுசீரமைக்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள வேப்பந்தட்டை உழவர் சந்தையினை எளம்பலூருக்கு இடமாற்றம் செய்யவும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-1 உழவர் சந்தையினை மீள பழைய இடத்திற்கே இடமாற்றம் செய்து புதிய கட்டடம் அமைக்கவும் 20 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

உழவர் சந்தைகளில் மின்னணு விலைப் பலகைகள்

தமிழ்நாட்டில் உள்ள 194 உழவர் சந்தைகளில் விவசாயிகளால் விற்கப்படும் விளைபொருட்கள் மொத்த சந்தை விலையை விடக் கூடுதலாகவும், நுகர்வோருக்குச் சில்லரை விலையை விடக் குறைவாகவும் விலை கிடைத்திட ஏதுவாக, அங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து காய்கனிகளுக்கும் அன்றாடம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் விலையினை அனைவருக்கும் வெளிப்படையாக அறிவித்திடும் வண்ணம், 59 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப் பலகைகள் 2 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.

சீரான சந்தை விநியோகம்... நிலையான நியாய விலை !

227.2 கோடி மதிப்பில் 24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் 80% மானியத்தில்

மகளிர் சுய-உதவிக் குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு - 3.4 கோடி ரூபாய் ஒதுக்கீடு

வான்மகள் திட்டத்துக்கு ரூ.4 கோடி

100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி உரிமம்

50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும்.

8.5 கோடி 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகளை தூர் வாருதல்.

ஆயிரம் ஏக்கர் பாசனம் வரம்பை உருவாக்கிட ரூ.6 கோடி ஒதுக்கீடு.

பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைத்தல்.

அதிகபட்ச மானியம் 60 சதவீதம்

1000 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்தல் ரூ.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் அமைக்க ரூ.4.80 கோடி ஒதுக்கீடு

பாதுகாப்பான சேமிப்பு ... விற்பனையில் இலாபம்

மதிப்புக் கூட்டுதலை மேம்படுத்த 4 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், 2 சிறப்பு வணிக வளாகங்கள் கட்டமைப்பு மேம்பாடு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையம் - 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

Summary

Pallavaram Avadi uzhavar Markets Modernization Agriculture Budget

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.