தஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

இனி மழையில் நனையாது! விளைபொருள்களை பாதுகாக்க ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள்!

தமிழக வேளாண் பட்ஜெட்டில் விளைபொருள்களை பாதுகாக்க ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என அறிவிப்பு

News image

தார்ப்பாய்கள் - dipr

Updated On :6 ஆகஸ்ட் 2026, 10:58 am IST

வேளாண் விளைபொருள்களை மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில், ரூ.10 கோடியில் தார்பாய்கள் வழங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

தமிழக வேளாண் பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் வினோத், பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் என்பதால், விவசாயிகளிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பட்ஜெட்டில், ஒரு முக்கிய அறிவிப்பாக தானியப் பாதுகாப்பு உணவுப் பாதுகாப்பு என்ற தலைப்பில், மாநிலம் முழுவதும் உள்ள 43,500 விவசாயிகளுக்கு ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

அரசு கொள்முதல் கிடங்குகளுக்குக் கொண்டு வரப்படும் வேளாண் விளைப்பொருள்கள் அவ்வப்போது மழை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அதிகம் சேதமடைந்து வரும் நிலையில், தவெக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

  • மேலும், திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.56 கோடி ஒதுக்கீடு.

  • பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம் தொடங்க ரூ.203.64 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.