திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. விஜியின் பேச்சால் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கோபமடைந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ. விஜி பேசுகையில், ”எனது தொகுதியில் கொடுக்கப்பட்ட பட்டாவுக்கான இடங்கள் கிடையாது. தேர்தலுக்காக போலி பட்டா கொடுத்துள்ளார்கள். வேண்டுமென்றால் ஆய்வு செய்து பாருங்கள்” எனத் தெரிவித்தார்.
அவரின் பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகளை நோக்கி அனைவரும் உட்காருங்கள், உண்மையைதான் பேசுகிறேன் என்றார்.
இதனால் கோபமடைந்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், முதலில் நீங்கள் உட்காருங்கள் என்று கடிந்து கொண்டார்.
இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், “கடந்த ஆட்சியில் ஒரு இடத்தை தேர்வு செய்து பட்டா வழங்கியிருக்க கூடும். அந்த பட்டாவை லே-அவுட் செய்யப்பட்டு வழங்கப்படும். பல இடங்களில் குறைபாடுகள் இருப்பது கவனத்துக்கு வந்துள்ளது” என்றார்.
முன்னதாக, திமுகவை விமர்சித்து சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் பேசும்போது எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பேச வேண்டாம் என்று பேரவைத் தலைவர் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Summary
Assembly Speaker agitated by remarks from Thiruverumbur TVK MLA!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கண்ணியம், கெளரவத்தை காப்பாற்றுங்கள்! தவெக எம்.எல்.ஏ.வுக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!
குரல் வாக்கெடுப்பு மூலம் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ தேர்தல் வழக்கு: வாக்காளர் பதிலளிக்க உத்தரவு!
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


