தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க, வாக்காளர் கீதாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர் கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
மனு கோரிக்கையில், இளையராஜாவுக்குப் பதில், வேறு ஒருவர் பெயர் இடம் பெற்றிருந்ததால், திருத்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் கீதா தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் இன்று(ஜூலை 28) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், திருத்த மனுவை தாக்கல் செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மனுதாரர் கீதாவிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதேபோல திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.எல்.ஏ.- எ.வ.வேலு, பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் ராஜிநாமா செய்து தவெக-வில் இணைந்த எஸ். ஜெயக்குமார், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், சேலம் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. கே. சிவகுமார், சீர்காழி தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. ஆர். செந்தில்செல்வன் ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகள் தொடர்பாக, எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதால், அனைத்து வழக்குகளையும் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Summary
The Madras High Court has ordered voter Geetha to file a response to the petition submitted by Uthangarai TVK MLA Ilaiyaraja, seeking the dismissal of the election case filed against him.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்!

தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சா் மரியவில்சன் பதிலளிக்க உத்தரவு
எ.வ.வேலு உள்ளிட்டோருக்கு எதிரான தோ்தல் வழக்குகள்: உயா்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏவிடம் திமுகவினா் பேரம்?
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்




