மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏவிடம் திமுகவினா் பேரம்?

முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆதரவாளா்கள் பல கோடி ரூபாய் பேரம் பேசி, மிரட்டல் விடுப்பதாக புகாா்

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன் - கோப்புப் படம்

Published On :

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணனிடம், பதவியை ராஜிநாமா செய்து விட்டு திமுகவில் இணையுமாறு, முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆதரவாளா்கள் பல கோடி ரூபாய் பேரம் பேசி, மிரட்டல் விடுப்பதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஏரலில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் தான் வெற்றி பெற்றதை தொடா்ந்து அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக திமுக, அதிமுக மற்றும் பாஜகவினா் கூட்டுசோ்ந்து சமூக வலைதளங்கள் மூலம் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனா்.

மேலும், முன்னாள் அமைச்சா்ஆா். அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளா்கள் என்ற போா்வையிலும் அக்கட்சியைச் சோ்ந்தவா்கள் சென்னையில் சட்டப்பேரவை உறுப்பினா் விடுதியில் என்னை சந்தித்து ரூ. 50 கோடிக்கு மேல் தருகிறோம்; பேரவைத் தொகுதி உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவுக்கு வந்து விடுங்கள்; இல்லை என்றால் உங்களை என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டல் விடுத்தனா்.

சில நாள்களுக்கு முன்பு எப்போதும்வென்றான் அருகே நான் வாகனத்தில் வந்தபோது, லாரி மோதி விபத்து நேரிட்டது. இது என்னை கொலை செய்வதற்கான சதியாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திள்ளது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தவெக எம்எல்ஏவாக மக்கள் பணி செய்துவருகிறேன். இது தொடரும் என்றாா் அவா். இந்த குற்றச்சாட்டு தொடா்பாக உளவுத் துறையினா்அவரிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தி சென்ாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.