ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 180 கோடி பேரம்! வெளியானது பரபரப்பு வாக்குமூலம்!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 180 கோடியில் பேரம் நடத்தப்பட்டதாக வழக்கில் கைது செய்யப்பட்டோர் வாக்குமூலம் குறித்து...

கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் ரமேஷ் - கார்த்தி - கோப்புப் படம்

Published On :3 ஜூலை 2026, 2:36 pm IST

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 180 கோடியில் பேரம் நடத்தப்பட்டதாக வழக்கில் கைது செய்யப்பட்டோர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் தவெக மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும், திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம் சிலர் பேரம் பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜை சில நாள்களுக்கு முன்பு சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

இந்தப் புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், சென்னையைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு, தியாகராஜன், , நரேஷ், சீனிவாசன், செல்வன், ராஜேஷ், முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் ரமேஷ், கார்த்திக் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ரூ. 180 கோடி வரையில் ஒதுக்கப்பட்டதாகவும், ஊத்தங்கரை எம்எல்ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று ஆட்சியைக் கவிழ்க்கும் சதித் திட்டத்தில் ஒரு வாரமாக ஈடுபட்டிருந்ததாகவும், விவகாரம் வெளியில் கசிந்ததால் அங்கிருந்து காலி செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சதித் திட்டத்தில் ஈடுபட்ட கார்ப்பரேட் நிறுவனம் கண்டறியப்பட்டதாகவும், கூடிய விரைவில் சம்பந்தப்பட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Summary

Rs. 180 crore deal to topple the TVK government: Sensational confession revealed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.