அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தவர்களுக்கு மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை வழங்குவது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் என்றும் இது 100% குதிரை பேரம் எனவும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியலில் அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த அதிமுக, இரண்டாக உடைந்து சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு எனப் பிரிந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 எம்.எல்.ஏ.க்களும் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பில் 25 எம்.எல்.ஏ.க்களுமாக அதிமுக பிரிந்தது.
இதனிடையே சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுகவில் இருந்து இன்று 5 பேர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினர். ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், அந்தியூர் எம்எல்ஏ ஹரிபாஸ்கர், இன்று காலை எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர்.
இதேபோல பண்ருட்டி எம்எல்ஏ மோகன், இபிஎஸ் ஆதரவாளரான கே.பி. முனுசாமியை சந்தித்துப் பேசினர். மேலும், சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன் ஜெய்சங்கரும் காங்கேயம் எம்எல்ஏ நடராஜன் ஆகியோரும் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சி.வி. சண்முகம் தரப்புக்கு பின்னடைவாகவே அமைந்துள்ளது.
இந்நிலையில், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு உறுப்பினர்கள் எண்ணிக்கை 17 ஆகக் குறைந்துள்ளது.
அதிமுகவில் இருந்து விலகுவதற்காக ராஜிநாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மூவரும் வழங்கினர். அவர்களின் ராஜிநாமா கடிதமும் ஏற்கப்பட்டது.
தொடர்ந்து, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்துப் பேசினர். ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் முதல்வர் விஜய்யை சட்டப்பேரவையிலேயே சந்தித்துப் பேசினர். அவரிடன் தவெக உறுப்பினர் அட்டையையும் பெற்றுக்கொண்டனர்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அதிமுக எம்.பி., இன்பதுரை பதிவிட்டுள்ளதாவது:
''அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை.இது 100 சதவீத குதிரை பேரம்!'' எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
TVK Membership Cards at Lightning Speed This is 100% Horse Trading ADMK Inbadurai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
'நான்தான் எல்லாம்' என்பது கூடாது! இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணி

இ.பி.எஸ்.ஸுக்கு 22, சி.வி.எஸ்.ஸுக்கு 25! அதிமுகவில் அடுத்தது என்ன?

தவெகவுக்கு அதிமுக ஆதரவு! பதவிக்கு ஆசைப்படவில்லை! எஸ்.பி. வேலுமணி

தவெகவுக்கு ஆதரவா? சி.வி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி ஆலோசனை! | ADMK | TVK
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு




