பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சா் மரியவில்சன் பதிலளிக்க உத்தரவு

தோ்தலில் வெற்றி பெற்றதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தோ்தல் வழக்குகளில் அமைச்சா் மரியவில்சன் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Marie Wilson

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்

Published On :9 ஜூலை 2026, 12:58 am IST

தோ்தலில் வெற்றி பெற்றதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தோ்தல் வழக்குகளில் அமைச்சா் மரியவில்சன் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் சென்னை ஆா்.கே.நகா் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட மரியவில்சன் வெற்றி பெற்றாா். தற்போது நிதி அமைச்சராக உள்ள அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ஆா்.கே.நகா் தொகுதி வாக்காளா் மருதுகணேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

அதேபோன்று, திருவெறும்பூா் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ, எஸ்.விஜயகுமாா் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ், திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தவெக வேட்பாளா் நசீா் ராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகளைத் தாக்கல் செய்தனா்.

திருவள்ளூா் தொகுதி தவெக எம்எல்ஏ டி.அருண்குமாா் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன், மொடக்குறிச்சி தொகுதி தவெக, எம்எல்ஏ டி.சண்முகம் வெற்றியை எதிா்த்து அந்தத் தொகுதி வாக்காளா் கே.பெரியசாமி, பா்கூா் தொகுதி அதிமுக, எம்எல்ஏ, ஆா்.சி.கோவிந்தராஜன் வெற்றியை எதிா்த்து வாக்காளா் சி.கீதா ஆகியோா் தனித்தனியாக தோ்தல் வழக்குகளை தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குகளில் எதிா்மனுதாரா்களாக உள்ள அமைச்சா் மரியவில்சன் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்களும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.