பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தியது குறித்து...

JCD Prabhakar

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் - கோப்புப் படம்

Published On :12 வினாடிகள் முன்பு

சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படாத அளவுக்கு இருக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது, "சட்டப்பேரவையின் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகளெல்லாம் சமூக ஊடகங்களில் பரவுவதாக கடந்த வாரம் சட்டப்பேரவையில் கூறினர். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.

இந்த நிலையில், திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நேரத்தில், எந்தவொரு அரசியல் கட்சிகளைச் சாராத இளைஞர்கள் குழு என்னைச் சந்தித்தனர்.

அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும், அரசியல் என்றால் என்ன என்பவற்றைப் படிப்படியாகத் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்திருப்பதாகக் கூறினர்.

அவர்களின் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை, அவர்கள் குடும்பத்தில் யாரும் அமைச்சராகவோ எம்எல்ஏ-வாகவோ இல்லை. இருப்பினும், அவர்கள் அரசியலில் ஈடுபடும் எண்ணம் வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அதேசமயம், அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என எம்எல்ஏ-க்கள் யோசிக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினர். பேசுகிறபோதே அவைக் குறிப்பில் இருந்து நீக்காத அளவுக்கு பேச வேண்டும் என்று எம்எல்ஏ-க்களுக்கு அறிவுறுத்தக் கூடாதா என்றும் கேட்டனர்.

ஆகையால், சட்டப்பேரவையில் பேசுகிற உறுப்பினர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, முறைப்படுத்திக் கொண்டு, நெறிப்படுத்திக் கொண்டு, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் விஷயங்களை ஏன் பேச வேண்டும் என சொல்லித் தரக் கூடாதா என்றும் கேட்கின்றனர். இதனை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சட்டப்பேரவையில் பேசுகிற உறுப்பினர்கள், அவையின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் உங்களின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் வாக்காளர்களின் கண்ணியத்தையும் காப்பாற்றுகிற விதத்தில் பேசினால், இவ்வாறான பிரச்னை வராது.

அதையும் மீறி, அவையின் மாண்பைக் குறைக்கிற வகையில் பணிகள் நடைபெறும்போது, அவ்வாறு செய்கிறவர்களை வெளிக்கொணர்வதில் என்ன தவறு என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆகையால், இந்தப் பிரச்னை குறித்து உங்கள் அனைவரிடமும் கலந்தாலோசித்து விரிவான முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Summary

Assembly Speaker JCD Prabhakar issues instructions to Members of the TN Legislative Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.