ஆதார் செயலி மூலம், பயனர்கள், தங்களது மின்னஞ்சலை இணைக்கும் வசதி ஜூலை 1ஆம் தேதி முதல் இலவசமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், இது ஆறு மாதங்களுக்கு மட்டுமே இலவசம். பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் செயலி மூலமாக சில குறிப்பிட்ட தகவல்களை பயனர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். அதில், தற்போது மின்னஞ்சலும் சேர்ந்துவிட்டது. ஆதார் அடையாள அட்டையுடன் மின்னஞ்சலை சேர்ப்பதற்கு ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1 முதல் அந்த கட்டணம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சலுகையானது ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் அதற்குள் மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் இந்த ஆறு மாதத்துக்குள் இலவசமாகவே தங்களது ஆதார் அடையாள அட்டையுடன் மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொள்ளலாம்.
ஒருவரது ஆதார் அடையாள அட்டையில் செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரியை மிக எளிதாக ஆதார் செயலி மூலம் ஒருவர் அப்டேட் செய்து கொள்ள முடியும்.
ஆதார் மோசடிகளிலிருந்து தப்பிக்கும் வகையில், ஆதார் அடையாள அட்டையுடன் மின்னஞ்சலை இணைப்பதன் மூலம், ஒருவரது ஆதார் எண் எங்காவது சரிபார்க்கப்பட்டால், அது தொடர்பான தகவல் மின்னஞ்சலுக்கு வரும்.
ஒருவேளை, ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் அதனை திரும்பப் பெற மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் இணைப்புகள் மூலம் புதிய ஆதார் அட்டைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆதார் செயலி மூலம் 2.5 லட்சம் பேர் தங்களது மின்னஞ்சல் முகவரியை அப்டேட் செய்திருக்கிறார்களாம்.
Summary
You can link your email via the Aadhaar app! It is free for 6 months only!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










