சகோதரரை வீடுபுகுந்து தாக்கிய வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை! ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை

பெண்கள், தனிநபர் மீது அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என அமைச்சர் நிர்மல் குமார் கூறியது குறித்து...

News image

நிர்மல் குமார் | அனிதா ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 9:59 am IST

பெண்கள், தனிநபர் மீது அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் விஜய் குறித்து முன்னாள் திமுக அமைச்சர் அவதூறாக பேசியது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "எ.வ. வேலு எதற்காக மருத்துவமனை சென்றார் எனத் தெரியவில்லை. ஆனால், அவர் மீது வலுவான குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும் உள்ளன. அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை யாராலும் கேட்க முடியாது. அவர் எப்படி இத்தனை ஆண்டுகள் அமைச்சராக இருந்தார் எனத் தெரியவில்லை. பொது வாழ்க்கையில் பொதுவான விஷயங்களை எப்படி பேச வேண்டும் என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.

இவ்வளவு மோசமாக, கேவலமாக தனிநபர் குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் விமர்சிக்கவும் பேசவும் யார் அதிகாரம் கொடுத்தது?

இப்படி பேசிப் பேசித்தான் இத்தனை ஆண்டுகள் இருந்தார்கள். இவற்றையெல்லாம் பொதுமக்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

ஏழை, எளிய மக்கள் வாக்களித்து இந்த தவெக அரசு வந்திருக்கிறது. இதுபோல தேவையில்லாமல், அநாகரிகமாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாரபட்சமின்றி 100 சதவிகிதம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை" என்று தெரிவித்தார்.

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையுடன் ஜாமின் வழங்கி, வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இரவில் திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Summary

100% strict action against those making defamatory remarks, says Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.