மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது: நிர்மல் குமார் அறிவிப்பு

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்று அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஜூன் 2026, 12:19 pm IST

தமிழக மின் துறையின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும், இனி கட்சி நிதி இல்லாமல் பணி நியமனங்கள் நடைபெறும், இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்று மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்துறையின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டு விவரங்களை விளக்கிக் கூறினார்.

அதில், தமிழக மின்துறையால் தொடங்கப்பட்டு பாதியில் உள்ள திட்டங்களை முடிக்க ரூ.8 ஆயிரம் கோடி தேவை. உப்பூர் மின் நிலையம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதனை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.9 ஆயிரம் கோடியில் 238 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

2000-ஆம் ஆண்டு மின் வாரிய ஊழியர்கள் எண்ணிக்கை 99,481. இபபோது 76,174.

மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவை 20,321 மெகாவாட், மாநிலத்தின் மின்சார உற்பத்தி 3,495 மெகாவாட்

பணிமாற்றம் வெளிப்படையாக நடக்கும், மின் துறையில் சிக்கனமாக செலவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

ரூ.215 கோடியை மிச்சப்படுத்தும் வகையில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பணி உயர்வும் நியாயமாக நடக்கும். மின் துறையின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக நடக்கும்.

மின் கட்டண உயர்வால் 5 ஆண்டுகளில் நுகர்வோர் வளர்ச்சி குறைந்துள்ளது. மின் கட்டண உயர்வால் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.

எனவே, இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

PDF
மின் வாரிய வெள்ளை அறிக்கை
பார்க்க

Summary

No electricity tariff hike this year Nirmal Kumar announces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.