தமிழகத்தில் பொதுமக்களில் பலரும் மின் கட்டணம் தொடர்பாக பாதிக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "3.7 லட்சம் புகார் வந்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். வாட்ஸ் ஆப்பில் வந்த ஏதோவொரு தவறான தகவலைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
பலருக்கும் மின் கட்டணம் அதிகம் வந்திருப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்தாண்டுடன் இந்தாண்டு ஒப்பிடுகையில், கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் (கோடை) 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு அளவில் மின் கட்டணம் வந்தது. ஆனால், இந்தாண்டில் 9.60 லட்சம் பேருக்குத்தான் அதிகரித்துள்ளது. கடந்தாண்டைவிட இந்தாண்டில் 2 லட்சம் பேர் குறைந்துள்ளனர்.
மக்களைக் குழப்புவதற்காகவே மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதுபோல 3.70 லட்சம் புகார்களெல்லாம் வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Summary
M.K. Stalin is spreading misinformation regarding electricity charges, says Minister Nirmal Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்
பாஜகவுடன் திமுக - அதிமுக கூட்டணி! 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி! - நிர்மல் குமார்
கரூர் சம்பவம்! மு.க. ஸ்டாலின், செந்தில்பாலாஜிக்கு நிர்மல்குமார் அடுக்கடுக்கான கேள்விகள்

பரந்தூர் விமான நிலையப் பணிகள் மீண்டும் தொடக்கமா? நிர்மல் குமார் விளக்கம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


