முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

கரூர் சம்பவம்! மு.க. ஸ்டாலின், செந்தில்பாலாஜிக்கு நிர்மல்குமார் அடுக்கடுக்கான கேள்விகள்

கரூர் சம்பவத்தில் மு.க. ஸ்டாலின், செந்தில்பாலாஜி மீது அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டு குறித்து...

News image

மு.க. ஸ்டாலின் | நிர்மல்குமார் | செந்தில்பாலாஜி - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 7:40 pm IST

கரூர் சம்பவத்தில் அரை மணிநேரத்தில் நாடகம் அரங்கேற்றப்பட்டதாக மு.க. ஸ்டாலின், செந்தில்பாலாஜி மீது அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் சம்பவத்தின்போது முதல்வர் விஜய் ஓடி ஒளிந்து விட்டதாக திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி விமர்சித்தது குறித்து அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து, செய்தியாளர்களுடன் நிர்மல் குமார் பேசியதாவது, "கரூரில் மக்களை முதல்வர் சந்தித்தை எதிர்கொள்ள முடியாமல்தான், அவர்கள் (திமுக) சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசுகின்றனர். கரூர் சம்பவத்தில் நடந்தவை அனைத்தும் அனைவருக்குமே தெரியும்.

கரூர் சம்பவம் நடந்த 5 நிமிடங்களில் செந்தில்பாலாஜி எப்படி சம்பவ இடத்துக்குச் செல்ல முடியும்? கேமராவுடன் எப்படி சென்றார்? சம்பவ இடத்துக்குப் பக்கத்திலேயே அவர் காத்துக் கொண்டிருந்தாரா? அங்கிருந்து சென்ற எனக்கும் காவல் கண்காணிப்பாளருக்கும் தெரியாத விஷயம், எப்படி செந்தில் பாலாஜிக்கு மட்டும் தெரியும்?

எங்கள் யாரையும் உள்ளே விடாமல், அங்கிருந்த தவெக தொண்டர்களை அடித்து விரட்டியது யார்?

சம்பவத்தின்போது உடனடியாக நள்ளிரவு 12 மணிக்கு அப்போதைய முதல்வர் (மு.க. ஸ்டாலின்) வரவேண்டிய அவசியம் என்ன? அதற்கு முன்னதாக 5 ஆண்டுகளில் இதுபோல அவர் எங்கேனும் சென்றிருக்கிறாரா? உடனடியாக தனி விமானம் ஏற்பாடு செய்து எங்கு வைத்திருந்தீர்கள்? அரை மணிநேரத்தில் கரூருக்கு வந்து இந்த மொத்த நாடகத்தையும் அரங்கேற்றுவதற்கான காரணம் என்ன?

இவற்றையெல்லாம்விட, உயிரிழந்தவர்கள் ஏன் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டனர்? உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

ஓர் உடற்கூறாய்வு செய்வதற்கு ஒன்றரை மணிநேரம் ஆகும் என்கிறார்கள். அப்படியெனில், அந்த 41 பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்வதற்குக் குறைந்தபட்சம் 30 மருத்துவர்களாவது தேவைப்படும். ஆனால், 30 மருத்துவர்களும் எப்படி உடனடியாக வரவழைக்கப்பட்டனர்?

இவ்வளவு பேசும் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறை சோதனையின்போது கட்டிலுக்கடியில் அழுதவர்தானே.

தற்போது, தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேர விவகாரத்தில் செந்தில்பாலாஜி தொடர்புடையவர்கள் மற்றும் ரூ. 50 லட்சம் ஹவாலா பணமும் பிடிபட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

Summary

Karur Stampede! Minister Nirmal Kumar poses a barrage of questions to DMK Chief M.K. Stalin and MLA Senthil Balaji

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.