பாஜகவுடன் திமுக மறைமுகமான உறவில் இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளார்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது, "இன்றைக்கு பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான் மிக நெருக்கமான உறவு இருக்கிறது. ஒரு சிலரின் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசு சார்பாக பலமுறை கேட்கப்பட்டது. ஆனால், இதுவரையில் ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை?
செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க இதுவரையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக அந்த கோப்புகளெல்லாம் தேங்கிக் கிடக்கின்றன. இதிலிருந்தே யார் மீது யார் இணக்கமாக இருக்கின்றனர் என்பது தெரிகிறது. ஆளுநரும் பாஜகவும் திமுகவும் ஒன்றாக இருக்கின்றனர்.
பாஜகவின் மறைமுக முகமாக திமுக இருக்கிறது. திமுகவின் பின்னிருந்து செயல்படுத்துவது பாஜகதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை? அதற்கு முதலில் அவர் பதிலளிக்கட்டும்.
சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை இருமுறை பாடுவதில் எந்தத் தவறுமில்லை, அதனால் நமக்கு எந்தப் பாதிப்புமில்லை. நாம் வந்தே மாதரத்தை எடுத்துவிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
Summary
Why has the Governor not granted approval for action against DMK Leader Senthil Balaji? Minister Nirmal Kumar questions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி
தமிழகத்தில் மின்வெட்டு ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

மின்துறையில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் நிர்மல் குமார்








