சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!ஆண்டுதோறும் சினிமா, சின்ன திரை விருதுகள்: ராஜ்மோகன் உறுதி கத்திக்குத்துக்குப் பிறகும் மக்கள் உயிரைக் காத்த இந்திய விமானி! மோடி புகழாரம்ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!

தென் கொரியாவைச் சேர்ந்த முன்னணி நுகர்வோர் மின்னணு நிறுவனமான சாம்சங், இந்தியாவில் 20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

சாம்சங் - கோப்புப் படம்

Published On :

புதுதில்லி: தென் கொரியாவைச் சேர்ந்த முன்னணி நுகர்வோர் மின்னணு நிறுவனமான சாம்சங், இந்தியாவின் 10 மாநிலங்களில் 20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்தது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸ் என்ற திட்டம், நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என்று சாம்சங் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் செக்டர் ஸ்கில்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் டெலிகாம் செக்டர் ஸ்கில் கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தக் கூட்டு முயற்சிகளின் மூலம், 10 மாநிலங்களில் 20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு துறையில் பயிற்சி அளிக்கவும், தொழில் துறைக்குத் தேவையான செயற்கை நுண்ணறிவு வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், இந்தியாவின் எதிர்கால செயற்கை நுண்ணறிவு திறமையாளர் கட்டமைப்பை வலுப்படுத்தவும் சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸ் திட்டத்தின் மூலம், நாங்கள் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு திறமையாளர்கள் மீது முதலீடு செய்ய உள்ளதாகவும், தன்னம்பிக்கை மற்றும் நடைமுறை அனுபவத்தைப் பெற இந்திய இளைஞர்களுக்கு இது வெகுவாக உதவும் என்றார் சாம்சங் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜே.பி. பார்க்.

சாம்சங் தனது 30 வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய திறமையாளர்களை வளர்ப்பதில் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில், சாம்சங் தனது 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு நேரடி செயற்கை நுண்ணறிவு பயிற்சி, திட்ட அடிப்படையிலான கற்றல் மற்றும் வழிகாட்டுதல் குறித்த அனுபவம் ஆகியவற்றை வழங்கும்.

Summary

Samsung aims to train 20,000 young people in AI across 10 states in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.