பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பலூசிஸ்தான் மக்கள் தங்களது முதலாவது சுதந்திர நாளை கோலகலமாகக் கொண்டாடியுள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் வேண்டும் என்று பலூசிஸ்தான் மாகாண மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். பலூசிஸ்தானுக்கு தனி மாநிலம் வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் சூழலில், ஆக. 11 ஆம் தேதியான இன்று முதலாவது சுதந்திர நாளை பலூசிஸ்தான் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், பலூசிஸ்தான் குடியரசை சட்டப்பூர்வ தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் பலுசிஸ்தான் குடியரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பலூசிஸ்தான் தலைவர் மிர் யார் பலூச், பலூசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக மட்டும் அல்லாமல் ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பலூசிஸ்தான் நாட்டின் வரைப்படம்.
இதுதொடர்பாக பலூசிஸ்தான் தலைவர் மிர் யார் பலூச் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு ஆண்டும் ஆக. 11 ஆம் தேதி பலுசிஸ்தானின் 6 கோடி மக்கள் தங்களது சுதந்திர நாளை கொண்டாடுவார்கள். இ
ன்று, நாங்கள் எங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், எங்களை சட்டப்பூர்வ நாடாக அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தானியர்கள், பஷ்டூன்கள், இந்துகள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் வாழும் பலூசிஸ்தானில் வாழும் நமது சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக திடீரென பலூசிஸ்தான் சுதந்திர நாளை அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Summary
Baloch nationalists, separatists and sections of the diaspora are marking August 11 as Balochistan's Independence Day. That's three days before August 14, Pakistan's Independence Day. Why is a Pakistani province celebrating Independence Day on August 11?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சரியான தகவல்களை அளிக்க வேண்டும்

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்!

ஏப்ரல் மாதம் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் குலைந்தது ஏன்? - ப. சிதம்பரம்

இ20 விவகாரம்: ஆகஸ்ட் 4-இல் பிரதமா் இல்லம் நோக்கி பேரணி - கேஜரிவால் அறிவிப்பு
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech



