திமுக சொல்வதை டி.கே. சிவகுமார் செய்வதாக தமிழக மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் ஞாயிற்றுக்கிழமை (ஆக்ஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமாருக்கும், மு,க. ஸ்டாலின் குடும்பத்துக்கும் கட்சியைத் தாண்டிய நல்ல உறவு இருக்கிறது. எனவே, இவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் டி.கே. சிவகுமார் செய்வார். எல்லாவற்றையும் விட திமுக குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல வகையில் டி.கே. சிவகுமார் விரும்பினார்.
காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதைவிட, டி.கே. சிவகுமார் திமுக குடும்பம், ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்பார் என்று பல தரப்பினர் சொல்லி வந்தனர். அதேமாதிரிதான் கடந்த ஒரு வாரம் நடைபெற்றது. டி.கே. சிவகுமார் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதைத்தான் திமுக சொல்கிறது. திமுக சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார். இதேமாதிரிதான் இவர்கள் இருவரும் சேர்ந்து கருணாநிதி காலத்திலும் ”தண்ணீர் கொடுக்காதீர்கள், தண்ணீர் கொடுத்தால் ஜெயலலிதாவுக்கு நற்பெயர் கிடைத்துவிடும்” என்று கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முட்டுக்கட்டை போட்டார்கள். அதையேதான் திமுக இப்போதும் செய்கிறது.
தமிழக முதல்வர் தனிமைப்பட்டு நிற்கிறார் என்ற வார்த்தை தமிழக மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் தெரிவித்ததைப் போல உள்ளது.
மேக்கேதாட்டு விவகாரத்தில், நேற்று காலை முதல்வர் ஆலோசனைகளை நடத்தி, உச்சச்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்று முடிவு எடுத்தபோது, திமுக 5 மணிக்கு மேல் அவசரமாக வழக்குப் பதிவு செய்கிறது. இதுமாதிரி ஒரே மாநிலத்தில் பல வழக்குகளைப் பதிவு செய்தால் எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கும்? எந்த அளவுக்கு அந்த மாநிலத்தின் உரிமைகளை பின்நோக்கித் தள்ளும். கடந்த 5 வருடங்களாக அவர்கள் என்ன செய்தார்கள்? கடந்த 30 ஆண்டுகளாக எல்லாவகையிலும் காவிரி நீர் பிரச்னையில் குழப்பத்தை ஏற்படுத்தியது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும்தான். இப்போதும் அதே குழப்பத்தைத் தான் ஏற்படுத்துகிறார்கள் என்று அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.
Summary
Tamil Nadu Electricity and Law Minister Nirmal Kumar stated on Sunday (August 2) that D.K. Shivakumar is acting according to what the DMK says.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவறான வாட்ஸ் ஆப் தகவலைப் பரப்பும் மு.க. ஸ்டாலின்: அமைச்சர் நிர்மல் குமார்
தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதை மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும்: நிர்மல் குமார்
பாஜகவுடன் திமுக - அதிமுக கூட்டணி! 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி! - நிர்மல் குமார்

பரந்தூர் விமான நிலையப் பணிகள் மீண்டும் தொடக்கமா? நிர்மல் குமார் விளக்கம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




