அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்

தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு

News image

அமைச்சர் நிர்மல் குமார் - From Video Grab

Updated On :25 ஜூன் 2026, 5:08 pm IST

தமிழக மின்துறையில் காலியாக உள்ள 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மின் துறை தலைமை அலுவலகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு முக்கிய விவரங்களை விளக்கிப் பேசினார்.

நிர்மல் குமார் கூறுகையில், தமிழக மின் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்காதது, உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காதது போன்ற காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் மின் துறையின் வருவாயை விட செலவு அதிகரித்துள்ளது.

தற்காலிக பணியாளர் எண்ணிக்கை கணக்கெடுக்கிறோம். இப்போதுதான் முதல் முறையாக இந்தப் பணி நடக்கிறது.

கடும் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஒரு நபர் 10 பேரின் வேலைகளை செய்ய வேண்டி உள்ளது.

மின் துறையில் 65,921 காலிப் பணியிங்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் சரியாக 9,136 பேர் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், வெறும் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மின் துறையில் தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்திருக்க வேண்டும். தேவை அதிகரித்தும் மின் உற்பத்தி கட்டமைப்பு அதிகரிக்கப்படவல்லை.

தமிழக மின்துறையில் உள்ள கேங்மேன் பணியிடங்களுக்கு நல்ல தீர்வு காணப்படும். 2021ஆம் ஆண்டு முதல் சுமார் ஐந்தாயிரம் பேர் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அவர்களுக்கு தீர்வு அளிக்கப்படும் என்றார்.

PDF
மின் வாரிய வெள்ளை அறிக்கை
பார்க்க

மின் வாரிய வெள்ளை அறிக்கையில் பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • மொத்த மின் ஊழியர்கள் தேவை - 1,40,635

  • பணியில் இருப்பவர்கள் - 74,174

  • காலிப் பணியிடங்கள் - 65,921

  • இந்தாண்டு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது - 20,449

  • 5 ஆண்டுகளில் ஓய்வு பெறுவோர் - 16,782 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Minister Nirmal Kumar announces that 20,449 vacant posts in the Tamil Nadu electricity department will be filled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.