ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

பாஜகவிடம் கொத்தடிமைகளாக திமுகவினர் சரண்: நிர்மல் குமார்

பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி அமைத்து, அடிமைகளாகி விட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியது பற்றி...

MK Stalin | Nirmal Kumar

மு.க. ஸ்டாலின் | நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :

பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி அமைத்து, அடிமைகளாகி விட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "திமுக முன்னதாக பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருந்தனர். தற்போது நேரடியாகவே கூட்டணியில் உள்ளனர்.

திமுக எம்.பி. திருச்சி சிவா மத்திய அமைச்சராகலாம் என திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகிறார். இதிலேயே தெரிந்துவிட்டது. அவர்களுக்குள் எல்லா பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்துவிட்டது. இதனிடையே, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை என அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு கூறுகிறார். இதையே பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் கூறினார்.

அப்படியெனில், திமுகவும் பாஜகவும் மீண்டும் 2001 காலகட்டத்துக்குச் சென்றுவிட்டனர். தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்த திமுக, அவர்களின் குடும்பத்தை வழக்குகளிலிருந்து காப்பாற்றவும், சொத்துகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக இன்று மீண்டும் பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைக்கப் போகின்றனர்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்த்து வாக்களிப்போம் என்று இதுவரையில் ஒரு வார்த்தைகூட திமுக தரப்பிலிருந்து வரவில்லை. தீர்மானத்துக்கு ஆதரவளித்தபோதிலும், நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா வந்தால் எதிர்த்து வாக்களிப்போம் என்று அவர்கள் இதுவரையில் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

தமிழகத்தின் நலனை எப்படி அடமானம் வைத்தார்களோ, அதுபோல் அவர்களும் தில்லியில் அடிமைகளாக சரணடைந்து விட்டனர்" என்று தெரிவித்தார்.

Summary

DMK has surrendered to the BJP in Delhi like slaves, says Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.