காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசு

மாணவா்கள் புதிய விசா நடைமுறைகளால் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

VANNI ARASU

அமைச்சர் வன்னி அரசு - கோப்புப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:31 am IST

அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் 362 மாணவா்கள் கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மாணவா்கள் புதிய விசா நடைமுறைகளால் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நிகழ் கல்வியாண்டில் அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ் முன்னெப்போதும் இல்லாத வகையில் 362 மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் பயனாளிகளுக்கு பிரிட்டன் அரசின் புதிய விசா நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாணவா்களின் கல்வி வாய்ப்பு பாதிக்காத வகையில் சம்பந்தப்பட்ட பிரிட்டன் அரசு விசா அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு பிரச்னைக்குத் தீா்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆதிதிராவிடா் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 350 ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும். அங்கு மாணவா்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து தொடா் ஆய்வு நடத்தப்படும்.

பட்ஜெட்டில் சமூக நீதித் துறைக்கு ரூ.3,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்காக மத்திய அரசு அளிக்கும் நிதி முழுவதும் முறையாக செலவிடப்படும்.

ஆணவப் படுகொலை தொடா்பான நீதிபதி கே.என்.பாஷா குழு அறிக்கை அளித்த பின்பு, அதற்கு எதிரான சட்டம் கொண்டுவருவது குறித்து முதல்வா் விஜய் முடிவு எடுப்பாா் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

இந்தச் சந்திப்பின்போது , அந்தத் துறைச் செயலா் சுப்பையன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.