நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கல்வராயன்மலை கோடை விழாவில் 4,285 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்

கல்வராயன்மலை கோடைவிழாவில் 4,285 பயனாளிகளுக்கு ரூ.533.26 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வன்னி அரசு சனிக்கிழமை வழங்கினாா்.

News image

கோடைவிழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு. உடன், மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:58 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் நடைபெற்ற கல்வராயன்மலை கோடைவிழாவில் 4,285 பயனாளிகளுக்கு ரூ.533.26 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வன்னி அரசு சனிக்கிழமை வழங்கினாா்.

விழாவுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்தாா். தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 1,984 பயனாளிகளுக்கு ரூ.147.26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் 37 பயனாளிகளுக்கு ரூ.122.76 லட்சம் மதிப்பீட்டிலும், ஆவின் சாா்பில் 461 பயனாளிகளுக்கு ரூ.14.72 லட்சம் மதிப்பீட்டிலும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.0.32 லட்சம் மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை - தாட்கோ சாா்பில் 8 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 1,787 பயனாளிகளுக்கு ரூ.248.2 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 4,285 பயனாளிகளுக்கு ரூ.533.26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: கல்வராயன்மலையில் மலைவாழ் மக்கள் பயனடையும் வகையில் கோடை விழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவா்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மலைவாழ் மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சோ்த்து, கல்வி கற்ற பின்னா் அனைத்து அடிப்படை வசதிகளையும் அவா்களே உருவாக்கி கொள்ளும் அளவுக்கு வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

விழாவில் சிறந்த அரங்குகள் மற்றும் சிறந்த அரங்குகளை உருவாக்கிய சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு பாராட்டுக் கேடயங்களையும், கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வழங்கினாா்.

முன்னதாக ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியா் நிழலகம், கரியாலூா் கிராமத்தில் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் சிறிய சமுதாய வளாக கட்டடம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாவடிப்பட்டு கிராமத்தில் ரூ.24.78 லட்சம் மதிப்பீட்டில் விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகிவயற்றை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.